
புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு-க.ப.அறவாணன்; ஆசாரகோவை-பக்.104; ரூ.50; நான்மணிக்கடிகை-பக்.111; ரூ.50; சிறுபஞ்சமூலம்-பக்.109; ரூ.50; திரிகடுகம்-108; ரூ.50; திணைமாலை நூற்றைம்பது, திணைமொழி ஐம்பது, கார் நாற்பது-பக்.284; ரூ.125; நாலடியார்-பக்.320; ரூ.100; ஏலாதி- பக்.98; ரூ.50; இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி- பக்.136; ரூ.65; திருக்குறள்-பக். 528; ரூ.75; களவழி நாற்பது-பக்.84; ரூ.40; பழமொழி-பக்.300; ரூ.100; ஐந்திணை எழுபது, ஐந்திணை ஐம்பது, கைந்நிலை-பக்.228; ரூ.100; வெளியீடு: தமிழ்க் கோட்டம், சென்னை. )044-23744568.
சங்க இலக்கியங்களுள் பதினெண் கீழக்கணக்கு நூல்களும் அடங்கும். இந் நூல்கள் அனைத்துக்கும் தெளிவுரை, சிறப்புரை, கருத்து அடைவு போன்றவற்றை வழங்கியிருப்பது அருமை. திருக்குறளுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பதினேழு நூல்களுக்கும், தெளிவுரை, சிறப்புரை, விளக்கவுரை, கருத்தடைவு, ஆராய்ச்சி முன்னுரை, பாடலுக்கேற்ற பொருத்தமான தலைப்பு ஆகியவற்றை தொடர் முயற்சியாக மேற்கொண்டு வெளிக்கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. மிக எளிய நடையில், சிறிய அளவில் கையடக்கப் புத்தகமாக வெளிவந்திருப்பது அதைவிட சிறப்பு. அனைவரது இல்லங்களிலும் இருக்கவேண்டிய அற இலக்கியக் கருவூலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.