பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்பதுபோல் மிகவும் துணிச்சலுடன் பதிப்பித்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழுக்கு ஒரு மாறுபட்ட வரவுதான்.
பாலியல் வசீகரமும், வக்கிரமும்!
Published on
Updated on
1 min read

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!- லதானந்த், பக்.166; ரூ.200; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 094 ✆ 044 45074203.

அந்தரங்கம் புனிதமானது மட்டுமல்ல; புதிரானதும்கூட. அந்த அந்தரங்கத்தின் ரகசிய வடிவத்தை 22 வகைகளாகப் பிரித்து பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். அந்த வடிவங்கள் அழகானவையா, கோரமானவையா என்பதை இந்தப் புத்தகத்தை வாசித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பேருந்தில் நம்முடன் பயணிக்கும் ஒருவரையோ, ரயிலில் பயணிப்போரில் யாராவது ஒருவரையோ தெரிவு செய்து ஆராய்ந்தால், இந்தப் புத்தகம் பட்டியலிடும் 22 பிரிவுகளில் ஒன்றில் அவர் அடங்கிவிடுவார்.

திருவள்ளுவர், மகாகவி பாரதியார் உள்ளிட்ட தமிழ்க் கவிஞர்களிடமிருந்தே ஒவ்வொரு கட்டுரையையும் தொடங்குகிறார் நூலாசிரியர்.

மலரினும் மெல்லியதான காமத்தில் இத்தனை பரிமாணங்களா என நம்மை வியக்கவைத்து அதன் வக்கிரங்களைப் பட்டியலிட்டு அதிர்ச்சியடையச் செய்கிறார்.

தலைப்பிடுகிறார்; பின் அதை விவரிக்கிறார்; முற்காலத்தில் அந்தத் தலைப்புக்குரிய பாலியல் செயல்களையும் அதற்குக் கிடைத்த அனுமதியையும், புறக்கணிப்பையும் காண்பிக்கிறார். மேலும், ஆண்கள் மட்டுமல்ல; பெண்களின் வக்கிரங்களையும் இந்நூலாசிரியர் வெளிக்காட்டுவதால் அந்தரங்கம் புனிதமானதோ, புதிரானதோ மட்டுமல்ல ஆபத்தானதும்கூட என்ற மிரட்சி ஏற்படுகிறது.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என ஒüவையின் மூதுரை நூலையும், பெரியாரைத் துணைக்கோடல் என்ற திருவள்ளுவரின் அதிகாரத்தையும் நூலாசிரியர் கையாண்டிருக்கும் விதம் ஏற்புடையதல்ல.

பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்பதுபோல் மிகவும் துணிச்சலுடன் பதிப்பித்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழுக்கு ஒரு மாறுபட்ட வரவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com