பாடல் 10
ஓங்கு மால் வரை ஏந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனை
பாங்கிலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ

விளக்கம்

ஓங்கு = உயர்ந்த. மால் வரை = பெருமைக்குரிய மலை, கயிலை மலை. பாங்கு = நல் சார்பு.

பொழிப்புரை

உயர்ந்ததும் பெருமை வாய்ந்ததும் ஆகிய கயிலாய மலையை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் மலையின் அடிக்கீழ் நெருக்குண்டு வீக்கத்தினால் பருக்குமாறு, தனது கால் விரலை ஊன்றியவன் சிவபெருமான். தேவையான அளவுக்கு தண்ணீர் தேங்கும் வயல்கள் கொண்டு நீர்வளம் நிறைந்து விளங்கும் தில்லை நகரில் உறையும் கூத்தனை, நல்லவர்களைச் சாராது இருக்கும் கொடிய தொண்டனாகிய நான் சிவபெருமானை மறந்தால் வாழ்வில் உய்வினை அடையமுடியாது. எனவே, எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

முடிவுரை

மேற்கண்ட பாடல்களில் அப்பர் பிரான் கொடியேன், தமியேன், இழுதையேன், பாங்கிலாத் தொண்டன், என்று அடக்கத்துடன் தன்னை இழிவாக கூறிக்கொள்கின்றார். அனைத்துப் பாடல்களும் உன்னை மறந்து உய்வனோ என்று கூறுவதன் உட்பொருள், உன்னை மறக்காமல் நினைத்தால் வாழ்க்கையில் உய்வினை அடையலாம் என்பதே. இந்த இரண்டு கருத்துகளையும் நாம் இணைத்துப் பார்த்தால், உயர்ந்த தகுதிகள் ஏதும் இல்லாமல் இழிந்த நிலையில் உள்ளவர்களும், சிவபெருமானை எப்பொழுதும் நினைத்து, வாழ்வினை உய்வினை அடையலாம் என்பதே இந்த பதிகத்தின் மையக் கருத்தாக உள்ளது என்பது நமக்குப் புலனாகும். எனவே அப்பர் பிரான் காட்டிய வழியில் சென்று, சிவபிரானை எப்பொழுதும் மறவாமல் நினைத்து, நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

இதன் பின்னர் தில்லையை அடைந்த அப்பர் பிரான், மேலும் பல பதிகங்கள் பாடி மகிழ்கின்றார். மூவர் பெருமானாருள், மிகவும் அதிகமான பதிகங்கள் தில்லைத் தலத்தின் மீது பாடியவர் அப்பர் பெருமான். தில்லைத் தலத்துடன் தொடர்புகொண்டுள்ள (நமக்கு கிடைத்துள்ள) பதிகங்களில், எட்டு பதிகங்கள் அப்பர் பிரான் அருளியது. இரண்டு பதிகங்கள் சம்பந்தப் பெருமான் அருளியவை. ஒரு பதிகம் சுந்தரர் அருளியது. காவிரி வடகரைத் தலங்களில், திருவையாற்றுக்கு அடுத்தபடி அதிகமான அப்பர் பிரானின் பதிகங்கள் உடைத்த பெருமை தில்லைக்கு உரியது. மூவர் பெருமானார்கள் அருளிய பதிகங்களுடன், மணிவாசகர் தில்லையில் பாடிய இருபத்து மூன்று பதிகங்கள், ஒன்பதாம் திருமுறையில் உள்ள, பதினாறு தில்லைப் பதிகங்கள், பதினோராம் திருமுறையில் உள்ள பொன்வண்ணத் திருவந்தாதி, பட்டினத்துப் பிள்ளையார் அருளிய கோயில் நான்மணிமாலை, நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தம் ஆகிய பதிகங்களுடன் மொத்தம் ஐம்பத்துமூன்று திருமுறைப் பதிகங்களை உடையது தில்லைத் தலம். சீர்காழி தலத்திற்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமான திருமுறைப் பதிகங்களை உடைய பெருமை தில்லைக்கு உண்டு.

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்திலும் சிவபெருமானை நினைக்க மறந்தால் வாழ்வினில் உய்வினை அடையமுடியாது என்று உணர்த்தும் வண்ணம் அனைத்துப் பாடல்களும், மறந்துய்வனோ என்று முடியுமாறு ஒரு பதிகத்தினை (5.4) அப்பர் பிரான் அருளியுள்ளார். (வட்டனை மதி சூடியை என்று தொடங்கும் பதிகம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு