ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

33. அரியானை அந்தணர் - பாடல் 2

திருவாரூர் தலத்தில், தினமும் மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகின்றது, அந்த சமயத்தில், அனைத்து சிவாலயங்களில் உள்ள சிவபெருமானின் கலைகள் திருவாரூர்

Updated On :5 ஆகஸ்ட் 2016, 10:26 am

பாடல் 2

கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக் காவிரி சூழ்
வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை ஆரூரும்
புகுவானை அறிந்தோம் அன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை வானவர்கள்
எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

அற்றார் = வேறு துணை இல்லாதவர்கள். அலந்தார்கள் = துன்பம் அடைந்தவர்கள்.

கங்கையினைக் குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு, பல சிவத் தலங்களைத் தனது கரையில் கொண்டுள்ள காவிரி நதி நினைவுக்கு வந்தது போலும். தமிழ் மக்களுக்கு காவிரி நதியை நினைத்தாலே தனிப் பெருமிதம் தோன்றும். கங்கையில் புனிதமாய காவிரி என்று தொண்டரடிப் பொடியாழ்வார் ஒரு பாசுரத்தில் குறிப்பிடுவார். ஒருபுறத்தில் காவிரி நதியால் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறையும் பெருமானே என்று குறிப்பிட்டு, கங்கையை குறிப்பிட்ட அதே அடியில் காவிரி நதியையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

உலகத்தில் பலருக்கு, அவரது உறவினர்கள் துணையாக இருப்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறு உறவினர் ஏதும் இல்லாதார்க்கு இறைவன் உறுதுணையாக இருப்பதை அப்பர் பிரான் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது ஆன்றோர் வாக்கு. சிந்திப்பரியன என்று தொடங்கும் ஐயாற்றுப் பதிகத்தின் ஒரு பாடலில் (பதிக எண்: 4.92.13) அப்பர் பிரான் உற்றார் இல்லாதார்க்கு உறுதுணையாக இருப்பன ஐயாரப்பன் திருவடிகள் என்று கூறுகின்றார். மேலும் அந்தத் திருவடிகள், நல்ல நூல்களாகிய சிவ ஆகமங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களால் புகழப் படுகின்றன: தன்னை முழு அன்புடன் வழிபடும் ஆற்றல் படைத்த அடியார்களுக்கு, ஞானஒளி வடிவமான வீடுபேற்றை அளிக்கின்றன: உலகப் பற்றை அறுத்தவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன

உற்றார் இல்லாதார்க்கு உறுதுணையாவன ஓதி நன்னூல்
கற்றார் பரவப் பெருமை உடையன காதல் செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான் கொடுக்கும்
அற்றார்க்கு அரும்பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே

திருவாரூர் தலத்தில், தினமும் மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகின்றது, அந்த சமயத்தில், அனைத்து சிவாலயங்களில் உள்ள சிவபெருமானின் கலைகள் திருவாரூர் சென்று மூலத்தானத்தில் அடங்குவதாக நம்பப்படுகின்றது. ஆரூர் புகுவான் என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவது இதனையா என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது. புக்கத் திருத்தாண்டகத்தின் ஒரு பாடலிலும் (பதிக எண்: 6.02) அந்திப்பொழுதில் திருவாரூரில் சிவபெருமான் நின்றதாக கூறுகின்றார். பந்தித்த = கட்டவிழ்த்து விடப்பட்ட. தான் சந்தித்த சிவபெருமானை, நீங்கள் எவரேனும் எங்கேனும் கண்டீர்களா என்று ஒரு பெண்மணி வினவ, அதற்கு மற்றொரு பெண்மணி விடை கூறுவதாக அமைந்த அகத்துறைப் பாடல். கட்டவிழ்த்து விடப்பட்ட இடபத்தின் மீது ஏறிக்கொண்டு எங்கோ சென்ற சங்கரர், அந்திப் பொழுதில் திருவாரூர் நின்று அங்கே எங்களது சங்கு போன்ற வெண்மையான வளையல்களைக் கொள்ளை கொண்டு விட்டு, பின்னர் தில்லைச் சிற்றம்பலம் வந்து புகுந்தார் என்று, மாலை நேரத்தில் அவர் ஆரூரில் நின்ற நிலையும், இரவில் தில்லையில் வந்து புகுந்த நிலையும் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. தினமும் இரவில், அனைத்து சிவன் கோயில்களில் உள்ள கலைகளும், சிற்றம்பலத்தில் நடமாடும் நடராஜப் பெருமானின் உருவத்தில் கலப்பதாக நம்பப் படுகின்றது. இந்த காரணத்தால் தான், அர்த்த ஜாம பூஜை, சிதம்பரத்தில் தினமும் இரவு பத்து மணிக்கு, அனைத்துக் கோயில்களிலும் அர்த்த ஜாம பூஜை முடிந்த பின்னர்) நடைபெறுகின்றது.

சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர் சங்கரரைக் கண்டீரோ கண்டோம் இந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறிப் படுதலையில் என் கொலோ ஏந்திக் கொண்டு
வந்து இங்கு என் வெள்வளையும் தாமும் எல்லாம் அணி ஆரூர் நின்று அந்திக் கொள்ள
பொன் தீ மணி விளக்குப் பூதம் பற்றப் புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே

இந்தப் பாடலில் மற்றாரும் தன்னொப்பார் இல்லாதான் என்று அப்பர் பெருமான், இறைவனைக் குறிப்பிடுவது, திருமுறை மரபினைச் சார்ந்தாகும். அவ்வாறு குறிப்பிடும் இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் உள்ள பாடல் திருமந்திரத்தில் வருவது. போது என்றால் மலர் என்று பொருள். இங்கே பொன்மலராகிய சகஸ்ரதளம், பொன்னை ஒப்பாகின்றபோது என்ற தொடரால், குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பாகின்ற போதகத்தானே

ஒப்புமை கூறுவதற்கு வேறு எவரும் இல்லாத காரணத்தால், சிவபெருமானுக்கு ஒப்பு சிவபெருமான்தான் என்ற கருத்தில், மெய்யே உன்னை ஒப்பாய் என்று, நீத்தல் விண்ணப்பம் ஒரு பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டுடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே

பொழிப்புரை

எல்லாக் கலைகளும் கைவரப் பெற்றவன் சிவபெருமான், கங்கையைத் தனது நீண்ட சடையில் தேக்கியவன்; காவிரியால் ஒருபுறத்தில் சூழப்பட்ட வலஞ்சுழி தலத்தில் உறைபவனும் வாழ்க்கையில் துணை ஏதும் இல்லாதவர்க்கும் துன்பத்தால் வாடுகின்றவர்க்கும் அருள் செய்யும் இறைவனும்; திருவாரூர் தலம் புகுகின்றவனும் ஆகிய சிவபெருமானை நாங்கள் அறிந்துகொண்டோம். அவன், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன்; வானவர்களால் எப்போதும் வணங்கி ஏத்தப்படுபவன். இத்தகைய பெருமை வாய்ந்த பெரும்பற்றப் புலியூரானைப் பேசாமல் கழிக்கும் வாழ்நாட்கள் வீணாகக் கழிக்கும் நாட்கள் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.