கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார்
ஆழாமைக் காக்கும் அடி
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெங்கூற்றைப்
பாய்ந்த அடி
கடுமுரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான்
கருதும் அடி
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம்
நீங்கா அடி

விளக்கம்

குறைந்து அடைந்தார் = தங்களது குறைகளை இறைவனிடம் வெளிப்படுத்தி வேண்டும் அடியார்கள்.

பொழிப்புரை

தீவினை உடையவர்கள் நெருங்க முடியாத திருவடிகள், பெருமானின் திருவடிகள். தங்களது குறைகளை இறைவனிடம் வெளிப்படுத்தி, பெருமானை வணங்கி வழிபடும் அடியார்கள் துன்பங்களில் ஆழாத வண்ணம் அவர்களை காக்கும் திருவடிகள். மத்தளம் வாசிப்பதையும் தாளம் இடுவதையும் பயிற்றுவிக்கும் தொடர்ந்து நடனமாடும் திருவடிகள். சிறுவன் மார்க்கண்டேயன், தான் வழிபட்டு வந்த இலிங்கத்தைத் தழுவிக்கொண்டு, தனது பாசத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்ததால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த காலனை, பாய்ந்து உதைத்த திருவடி. விரைந்து செல்லக்கூடிய காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவனின் திருவடிகள் கழல் அணிந்தவையாக காணப்படுகின்றன. கடலால் சூழப்பட்ட இந்த நிலவுலகினைக் காக்கும் பணியினை மேற்கொண்ட திருமால், விரும்பிப் போற்றும் திருவடிகள். இத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளை உடைய பெருமான், நீண்ட பிறையினைத் தனது சடையில் மாலையாக அணிந்துள்ளான். அவன் பல பெருமைகள் நிறைந்ததும் கெடில நதிக்கரையில் அமைந்ததும் ஆகிய அதிகை வீரட்டத்தை விட்டு நீங்காது உறைகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை