(திருவதிகை வீரட்டம் – குறுந்தொகை)
பின்னணி
தருமசேனர் என்ற பெயரில் தான் சார்ந்திருந்த சமண சமயத்தை விட்டொழித்து, அப்பர் பிரான் சைவ சமயம் சார்ந்த பின்னர், அதனைக் கண்டு பொறுக்காத சமணர்களும் பல்லவ மன்னனும், அவரைக் கொல்வதற்கு பல சூழ்ச்சிகள் செய்தனர். சியபெருமானின் கருணையினால் அந்த சூழ்ச்சிகளிலிருந்து தப்பிய அப்பர் பிரான், தன்னைக் காப்பாற்றிய அதிகை வீரட்டத்துப் பெருமானுக்கு நன்றி கூறுவதற்காக திருவதிகை தலத்திற்கு வந்தபோது பல பதிகங்கள் பாடினார். அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதிகம். இவ்வாறு இரண்டாவது முறையாக திருவதிகை வந்த அப்பர் பிரான் இதன் பின்னர் திருவதிகை வந்ததாக குறிப்புகள் ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை.
அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகிய திருவதிகையில் நடந்த வீரச் செயல், திரிபுரங்களையும் எரித்தது. இந்த செயல் இந்த பதிகத்தின் ஐந்து பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இந்த பதிகம், அகத்துறை வகையில் அமைந்தது. பெருமானைக் காணாவிடில், எண்ணாவிடில், கற்காவிடில், கூறாவிடில், நினைத்து புலம்பாவிடில் தனக்கு தூக்கம் வராது என்று அனைத்துப் பாடல்களிலும் அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த பாடல். அனைத்துப் பாடல்களும் என் கண் துயில் கொள்ளுமே என்று முடிகின்றன. கொள்ளுமே என்ற சொல்லில் உள்ள ஏகாரம், எதிர்மறைப் பொருளை உணர்த்துவதாக நாம் கொள்ள வேண்டும்.
பாடல் 1
கோணல் மாமதி சூடி ஓர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயன் நிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

கோணல் = வளைந்த. பாணில் = பண்ணில். பண் என்ற சொல் எதுகை நோக்கி பாண் எனத் திரிந்தது. கோவணம் அணிந்து எங்கும் திரிந்தாலும், அதற்காக நாணம் அடையாதவன் என்று சிவபெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நால்விரல் கோவணம் என்று பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படும் கோவணத்தின் பெருமையை மணிவாசகர் திருச்சாழல் பதிகத்தில் கூறுகின்றார். அனைவர்க்கும் தலைவனாக உள்ள ஈசன், துணியிலிருந்து கிழித்துத் தைக்கப்பட்ட கோவணத்தை அணிந்திருப்பது ஏன் என்று கேட்கும் கேள்விக்கு விடையாக இறைவன் அணிந்திருக்கும் கோவணத்தின் சிறப்பு இந்த பாடலில் கூறப்படுகின்றது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பல பொருட்களும், கலை ஞானமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கோவணமாக உள்ளதாக மணிவாசகர் கூறுகின்றார். மேலும் அந்த கோவணத்தைத் தாங்கி நிற்கும் அரை ஞாண் கயிறாக நான்கு வேதங்கள் இருப்பதாகவும் இங்கே கூறுகின்றார். இத்தகைய பெருமை படைத்த கோவணத்தை அணிந்ததற்கு நாணம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அல்லவா. மாறாக பெருமை தானே கொள்ளவேண்டும். உணர்ச்சிகளைக் கடந்த பெருமான், நாணம் கொள்வதுமில்லை, பெருமை அடைவதுமில்லை.

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா
தன்னையே கோவணமாச் சாத்தினான் காண் சாழலோ

பொழிப்புரை

வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியவனும், கோவண ஆடையை அணிந்தும் சிறிதும் நாணம் இல்லாமல் வாழ்பவனும், தன்னை விரும்பித் தொழும் அடியார்களுக்கு சிறந்த பயன்களை அளிக்கும் நிலைக்களனாக இருப்பவனும், பலவிதமான இராகங்களை வீணையில் தொடர்ந்து இசைத்து பழகுபவனும் ஆகிய சிவபெருமான் அதிகை வீரட்டத்தில் உறைகின்றான். அவனைக் கண்டால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே நான் அடிக்கடி அவரைச் சென்று கண்டு தொழுகின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை