ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

15. கோணல் மாமதி - பாடல் 3

தன்னைப் பற்றுக்கோடாகக் அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான்.

Updated On :9 பிப்ரவரி 2016, 8:50 am

பாடல் 3

உற்றவர் தம் உறுநோய் களைபவர்
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

உற்றவர் = தம்மைப் பற்றுகோடாக அடைந்த அடியார்கள். பெற்றம் = எருது. பிறங்கு = நன்றாக விளங்கும்.

பொழிப்புரை

தன்னைப் பற்றுக்கோடாகக் அடியார்களின் பிறவிப் பிணியினை நீக்கி அருள் புரிபவர் சிவபெருமான். எருதினை வாகனமாகக் கொண்டுள்ள அவரது சடை பொலிவுடன் விளங்குகின்றது. கெடில நதியால் சூழப்பட்ட திருவதிகை வீரட்டத்தில் உறையும் அவரின் பெருமைகளை கற்றால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே, அடியேன் அவரது பெருமைகளைக் கற்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.