ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

15. கோணல் மாமதி - பாடல் 5

பல வகையான கணங்களும் தேவர்களும் பணிந்து தொழப்படுபவன் சிவபெருமான். அவனை நல்லவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி புகழ்கின்றனர்

Updated On :9 பிப்ரவரி 2016, 8:53 am

பாடல் 5

பல்லாரும் பல தேவர் பணிபவர்
நல்லாரும் நயந்து ஏத்தப் படுபவன்
வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்
கல்லேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

பல்லார் = பல மக்கள். நயந்து = விரும்பி. பெருமான் சிரித்தே முப்புரங்களையும் எரித்தார் என்று புராணங்களில் சொல்லப்பட்டாலும், பல தேவாரப் பதிகங்களில் வில்லினை எய்தி கோட்டைகளை எரித்தவன் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு காரணம், முப்புரத்து அரக்கர்கள் பெற்ற வரம் தான். தங்களது மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் எய்யப்படும் அம்பு ஒன்றினால் தான் தங்களது கோட்டைகள் அழிபட வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. எனவேதான் அந்த வரம் பொய்யாகக்கூடாது என்பதற்காக அம்பினை எய்து சிவபெருமான் கோட்டைகளை அழித்தார் என்று கூறப்படுகின்றது.

பொழிப்புரை

பல வகையான கணங்களும் தேவர்களும் பணிந்து தொழப்படுபவன் சிவபெருமான். அவனை நல்லவர்கள் அனைவரும் மிகவும் விரும்பி புகழ்கின்றனர். அவன்தான் ஒரே அம்பினால், பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தின் சிறப்புகளையும், பெருமானது பெருமைகளையும் கற்று அறிந்தால் தான் எனது கண்கள் துயில் கொள்ளும். எனவே நான், பெருமனது பெருமைகளை அறிந்துகொள்கின்றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.