ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

16. எட்டு நாண்மலர் கொண்டு - பாடல் 2

நீளமா = இடைவிடாது. கோள = கொடுமை பொருந்திய. குறைவித்தல் = நீக்குதல்.

Updated On :23 பிப்ரவரி 2016, 12:15 pm

பாடல் 2

நீளமா நினைந்து எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்
வாளமா விழியும் கெடிலக்கரை
வேளி சூழ்ந்து அழகாய வீரட்டரே

விளக்கம்

நீளமா = இடைவிடாது. கோள = கொடுமை பொருந்திய. குறைவித்தல் = நீக்குதல். மால் = அகன்று. வாள = வட்டமாக. இழியும் = ஓடும். வேலி என்ற சொல் எதுகை குறித்து வேளி எனத் திரிந்தது. வினைகளின் வழி நின்று கோள்கள் ஒரு மனதினுக்கு நன்மைகளையும் தீமைகளையும் செய்கின்றன. இந்த உண்மையை உணர்த்தும் பொருட்டு, கோள வல் வினை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆனால் அத்தகைய வலிமை வாய்ந்த வினைகள், சிவனடியார்களுக்கு வருத்தம் ஏதும் தராது என்ற செய்தியை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த கருத்தினை, ஞானசம்பந்தரும் தனது கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடலில் (2.89.1) குறிப்பிடுகின்றார். ஒன்பது கோள்களும் தங்களது குற்றங்களை நீக்கி, அடியார்களுக்கு மிகவும் நல்லனவாகத் திகழும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லனவே செய்யும் என்பதை வலியுறுத்தும் வகையில், நல்ல என்ற சொல்லினை நான்கு முறை பயன்படுத்திய சம்பந்தர், மிகவும் நல்லன என்று இந்த பாடலை முடிக்கின்றார்.

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

பொழிப்புரை

அழகான அதிகை நகரினை வேலி போன்று சூழ்ந்து வட்டமாக ஓடும் கெடில நதிக்கரையில் அமைந்துள்ள வீரட்டத்தில் உறையும் வீரட்டர், தன்னை இடைவிடாது நினைந்து, எட்டு வகையான மலர்களைக் கொண்டு வழிபடும் அடியார்களின் கொடுமை பொருந்தியதும் வல்லமை வாய்ந்ததும் ஆகிய வினைகளை அறவே நீக்குவார். எனவே எட்டு மலர்களைக் கொண்டு அவரை வழிபட்டு பயன்பெறுவீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.