பாடல் 8
இயல்பாய ஈசன் எந்தை தந்தை என் சிந்தை மேய உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான தியம்பகன் திரிசூலத்து அன்ன கையன்
கயல்பாயும் கண்டல் சூழ் உண்ட வேலி கழிப்பாலை மேய கபாலப்பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

விளக்கம்

தியம்பகன் = திரியம்பகன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், முக்கண்ணன். கண்டல் = தாழை. முயல்வான் = இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்பவன். மயலாய மாயக் குரம்பை = மயக்கம் அடைவதும், நிலையற்றதும் ஆகிய உடல். புலன்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, அந்த சிற்றின்பங்களில் மயங்கி கிடக்கும் உடலின் தன்மையும், ஒரு நாள் மாயமாக மறையக்கூடிய தன்மையும் கொண்ட உடல் என்பது உணர்த்தப்படுகின்றது.

இயல்பாய ஈசன் = தலைவனாகும் தன்மை. ஈசன் என்ற சொல்லுக்குத் தலைவன் என்று பொருள். எந்தை தந்தை என் = நான், எனது தந்தை, மற்றும் தந்தையின் தந்தை என்று பரம்பரையாக உள்ள நிலை. மணிவாசகரும் பிடித்த பத்து பதிகத்தின் ஒரு பாடலில், தனது குடி முழுதையும் ஆண்டவனே என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.

உம்பர்கட்கு அரசே ஒழிவு அற நிறைந்த யோகமே ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து என் குடி முழுதாண்ட வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே

அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதாக கருதப்படும் காற்று புகாத இடங்களும் உள்ளன. ஆனால் இறைவன் இல்லாத இடமே இல்லை என்பதை உணர்த்தும் பொருட்டு ஒழவற நிறைந்த யோகமே என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார். வாழ்வினை அறுத்து வாழ்வு அளித்த மருந்து என்று அடிகளார் கூறுவது வியப்பினைத் தரலாம். வாழ்வினை அறுத்த பின்னர், வாழ்வு எப்படி அளிக்க முடியும் என்ற வினா நம்முள் எழுகின்றது. அறுக்கப் பட்ட வாழ்வானது, வினையின் விளைவாக கிடைத்த வாழ்வு, வினைத் தொகுதிகளுடன் பிணைந்த வாழ்வு; அளிக்கப்பட்ட வாழ்வோ, நிலையான முக்தி நிலை; பிறவிப் பிணிக்கு மருந்தாக அமைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவைத்து, நிலையான ஆனந்தத்தைத் தரும் பெருவாழ்வு அளித்தமை இங்கே வாழ்வற வாழ்வித்த மருந்தே என்ற தொடரின் மூலம் உணர்த்தப்படுகின்றது. குடி முழுதாண்ட என்ற தொடருக்கு, வாதவூரார் தனது குடியினை, பரம்பரையை குறிப்பிடவில்லை என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். திருப்பெருந்துறையில் வாதவூரரை ஆட்கொண்ட சிவபெருமான், அதன் பின்னர் பாண்டிய மன்னனையும் ஆட்கொள்கின்றார்; அத்துடன் நிற்காமல் திருவாசகம் எனும் அமுதத்தை, மணிவாசகர் மூலமாக வழங்கி நம் அனைவரையும் ஆட்கொண்டுள்ளார் அல்லவா, எனவே குடி என்பதை மனித இனம் மொத்தத்தையும் குறிப்பிடுவதாக பொருள் கொள்ளலாம், என்பதே அந்த விளக்கமாகும்.

தனது இயல்பினால் அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக சிவபெருமான் விளங்கும் தன்மை, மணிவாசகரால் திருச்சாழல் பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப்படுகின்றது. திருநீற்றினை உடலில் பூசிக்கொண்டும், கோபம் கொண்டு படம் எடுத்து ஆடும் பாம்பினை அணிந்து கொண்டும், நான்மறைகளை ஓதிக்கொண்டும் இறைவன் இருப்பதேன் என்று ஒரு தோழி கேள்வி கேட்க, அதற்கு அடுத்தவள் விடை அளிப்பதாக அமைந்துள்ள பாடல். அவன் எதனைப் பூசினாலும், எதனை அணிகலனாக அணிந்தாலும், என்ன பேசினாலும் என்ன, அவனது அணிகலன், பேச்சு, மற்றும் அவன் அணியும் சாந்தம் இயல்பாகவே அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் அவனது தன்மையை, எந்த விதத்திலும் மாற்றாது என்று விடையாக அளிக்கும் பாடல்.

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறை போலும் காணேடி
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை
ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ

பொழிப்புரை

தனது இயல்பு பற்றி அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான் ஆவார்; பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்திற்குத் தலைவனாக விளங்கும் அவன், எனது சிந்தையில் விரும்பி உறைகின்றான்; மூன்று மூர்த்திகளாகத் திகழ்ந்து இடைவிடாது ஐந்து தொழில்களையும் செய்யும் பெருமான், தூயவன், மூன்று கண்களை உடையவன், முத்தலை சூலத்தைத் தனது கையில் ஏந்தியவன். தாழை மரங்கள் வேலிகளாக அமைந்த கயல்கள் பாயும் நீர்நிலைகளை அதிகமாக உடைய கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான், புலன்கள் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்வதும் நிலையற்றதும் ஆகிய உடலினை விட்டு ஆன்மா முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு