ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 4

சண்டீசருக்கு உலகத்தை ஆளும் பதவி அளித்ததை பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்

Updated On :28 ஜூலை 2016, 9:43 am

பாடல் 4

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீணுலகெலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ

விளக்கம்

மாணி = பிரமச்சாரி, இங்கே சண்டீசரைக் குறிக்கும். தாணு = நிலையாக இருப்பவன். ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், சிவபெருமான் இருப்பதால் தாணு என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது. தமியேன் = தனியாக இருப்பவன். நாம் இன்பங்கள் அனுபவிக்கும்போது நம்முடன் அந்த இன்பங்களை பகிர்ந்துகொள்வதற்கு பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால் துன்பங்கள் நம்மை வருத்தும்போது. எவரும் நம்முடன் இருப்பதில்லை. எனவேதான் துன்பத்தில் தனித்து வாடுபவன் என்று அப்பர் பிரான் தன்னைக் குறிப்பிடுகின்றார்.

சண்டீசருக்கு உலகத்தை ஆளும் பதவி அளித்ததை பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.48.7) ஒன்றினில் சம்பந்தர் தலைமைப் பதவி சண்டீசருக்கு அருளப் பட்டதை குறிப்பிடுகின்றார். சண்டீசர் செய்த சிவபூஜையில், பசுக்கள் விரும்பி பங்குகொண்ட நிலையில், தாமே பால் பொழிந்ததைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளாமல், பால் வீணாக்கப்படுகின்றது என்ற எண்ணத்தில் பொறுமை இழந்த தந்தை எச்சதத்தரின் நிலை இங்கே பேணாத என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுகின்றது. தனக்கிருந்த கோபத்தில், குடங்களில் வைக்கப்பட்டிருந்த பால், இறைவனை நீராட்ட பயன்படக்கூடாது என்று திட்டமிட்டு, பாற்குடங்களை காலால் இடறித் தள்ள பாய்ந்த செய்கை, வேரடைந்து பாய்ந்த தாள் என்ற தொடர் உணர்த்துகின்றது. வேர்த்தடிந்தான் = நிலையை அறுத்தவன், சினத்தால் வேர்த்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

பீரடைந்த பால் அது ஆட்டப் பேணாது அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே

பீர் அடைந்த பால் = தானாகச் சுரந்த பால். மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பசுக்கள், எவரும் கறக்கவேண்டிய அவசியம் இல்லாமல், விருப்பத்துடன் தாங்களே பொழிந்த பால் என்பது இங்கே கூறப்பட்டுள்ளது. தனது கன்றினைக் காணும் தாய்ப்பசு, எவரும் பால் கறக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தானே பால் பொழிவது இயற்கை. மிகவும் பரிவு கொண்டு பசுக்களை மேய்த்த விசாரசருமர் (சண்டீசரின் இயற்பெயர்) பால் அன்பு கொண்ட பசுக்கள், அவருக்கு அருகே சென்று, தங்களது கன்று போன்று அவரைக் கருதி, எவரும் கறவாமல் பாலைப் பொழிந்தன என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மறைக்கன்று என்று வேதங்களைக் கற்றுவந்த சிறுவன் சண்டீசரை குறிப்பிடுகின்றார்.

அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவின்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறைக்கன்று
தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாம் தன்மை நிலையினவாய்க்
கணித்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால்

பொழிப்புரை

பிரமச்சாரி சிறுவனாகிய சண்டீசர், பசுக்கள் விருப்பத்துடன் தாமே பொழிந்த பாலினைக் கொண்டு நீராட்டி வழிபட்ட தன்மைக்கு, உலகங்களை ஆளும் பதவி கொடுத்தவன் சிவபெருமான். அவன், பொற்கொல்லர்கள் பொன்னின் தரத்தை அளப்பதற்கு தங்களிடம் வைத்திருக்கும் மாற்றுக் குறையாத செம்பொன் போன்றவன். தில்லைப் பொன்னம்பலத்துள்ளே நின்று ஆடும் அந்த சிவபெருமான், முற்றூழிக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பவன். இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபெருமானை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமுடியாது. எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.