ஒரு துப்புரவுத் தொழிலாளி தெருவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
அவ்வழியே ஒரு தத்துவ ஞானி சென்று கொண்டிருந்தார். தொழிலாளியின் உழைப்பைக் கண்ட தத்துவ ஞானி, அவனிடம், ""நான் உன்னைப் பார்த்து இரக்கப்படுகிறேன். உன் வேலை மிகவும் கஷ்டமானது. எப்படித்தான் இதைச் சகித்துக் கொண்டு செய்கிறாயோ'' என்றார்.
அதற்கு அந்தத் தொழிலாளி, ""மிகவும் நன்றி ஐயா! என் வேலையின் சிரமத்தை உணர்ந்ததற்கு...,தங்களது வேலை என்ன?'' என்று கேட்டான்.
"நான் மனிதர்களின் மனதைப் படிக்கிறேன். அவர்கள் செயல்களையும், விருப்பங்களையும் படிக்கிறேன்...அவர்களது கோபத்தையும், பேராசைகளையும், சுயநலத்தையும், கர்வத்தையும், பொறாமைகளையும் புரிந்து கொள்கிறேன்'' என்று தத்துவ ஞானி பதில் கூறினார்.
"அடப் பாவமே! சரிதான்! நீங்கள் என்னைவிட மோசமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறதே.....எனக்கும் உங்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது...., நானும் உங்களைப் பார்த்து இரக்கப்படுகிறேன்'' என்றான் தொழிலாளி!
- மு.முரளிதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.