பன்முகத்தன்மை கொண்ட சமூகமே வளர்ச்சிக்கு வித்திடும்: கேரள ஆளுநர் பேச்சு

பன்முகத்தன்மை கொண்ட சமூகமே வளர்ச்சிக்கு வித்திடும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை கொண்ட சமூகமே வளர்ச்சிக்கு வித்திடும்: கேரள ஆளுநர் பேச்சு
Updated on
1 min read


பன்முகத்தன்மை கொண்ட சமூகமே வளர்ச்சிக்கு வித்திடும் என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேசினார். அவர் பேசியதாவது:

"கல்வி ஒன்றே மாற்றத்திற்கான வழி. உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி நாம் பேசும்பொழுது, அனைவருக்கும் கல்வியை அணுகுவதில் உருவாக்கப்பட்டுள்ள தடைகள் பற்றிய அக்கறையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

இந்தியப் பாரம்பரியம் என்பது உள்ளடக்கிய பாரம்பரியமாகும். பன்முகத்தன்மை என்பது இயற்கையின் விதி. ஒரு சமூகம் எவ்வளவு மாறுபடுகிறதோ, அந்த அளவுக்கு அச்சமூகம் மிகவும் முற்போக்குத்தனமாக மாறும்.

ஒரு குழந்தையின் கல்விக்கு பொருளாதார நிலை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. நாம் அறிவைத் தேடுவோர் மட்டுமல்ல. அறிவைத் தேடுபவர்களுக்கும் நாம் உதவியாக இருக்க வேண்டும். கல்வி பெறுவதற்கான அனைத்துத் தடைகளையும் நீக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகம் கல்வியறிவு பெறுவதைக் காட்டிலும் சிறந்தது எதுவும் கிடையாது. கடந்த 50 ஆண்டுகளில் நாம் கண்ட முன்னேற்றம் என்பது 5,000 ஆண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவைக் காட்டிலும் அதிகம் என்று மிகப் பெரிய விஞ்ஞானிகளே கூறுகிறார்கள்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com