பிக் பாஸில் மலர்ந்த காதல்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலர்ந்த காதல்கள் குறித்து...
பிக் பாஸில் மலர்ந்த காதல்கள்!
Published on
Updated on
3 min read

காதலர்களுக்கு ஏதுங்க தினம்? தினம் தினம் காதலர் தினம்தான் என்று காதலர்கள் சொல்லலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் ஒரு நாள் என்பதால் உலகம் முழுவதும் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இரு மனங்களின் சங்கமமே காதல். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எத்தனையோ திரைப்படங்களையும் தொடர்களையும் நாம் பார்த்து இருக்கிறோம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் நாம் கூற முடியாது.

அதுவும் சொந்த பந்தங்களையும் நண்பர்களையும் விட்டுவிட்டு செல்போன் உள்ளிட்ட எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஏதேச்சையாகவே காதல் மலர்ந்து விடுகிறது. அக்காதலை ஆண் - பெண் இருவரும் வெளிப்படுத்தியும் உள்ளனர். சிலர் மனதுக்குள்ளே வைத்துக்கொண்டும் உள்ளனர், ஒரு சிலர் மட்டும் அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் காதல் மலரத்தான் செய்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி, 8 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு சீசன்களிலும் மலர்ந்த காதல்கள் ஒவ்வொன்றும் புதுமையானவை.

ஆரவ் - ஓவியா

பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வை ஒருதலைபட்சமாக காதலித்துவந்த ஓவியாவின் காதலை, ஆரவ் ஏற்க மறுத்ததால், திடீரென பிக் பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓவியா. பின்னர் இவர்கள் வெளியே வந்து நல்ல நண்பர்களாக உள்ளனர்.

ஆரவ் - ஓவியா
ஆரவ் - ஓவியா

கவின் - லாஸ்லியா

பிக் பாஸ் நிக்ழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்ற நடிகர் கவின் - இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு ஆதரவாக ஏராளமான ரசிகர்களும் இருந்தனர், பிக் பாஸ் வீட்டுக்குள் காதலர்களாக இருந்த இவர்கள் வெளியே வந்த பின்னர் இருவர்களுக்குள் ஒத்துவரவில்லை என்று பிரிந்தனர்.

கவின் - லாஸ்லியா
கவின் - லாஸ்லியா

அமீர் - பாவனி

சின்னதிரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவ்னி. நடன கலைஞரான அமீருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்றனர். பிக் பாஸ் வீட்டில் பாவ்னியை ஒருதலைபட்சமாக அமீர் காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டில் அமீரின் காதலை ஏற்காத பாவ்னி, வெளியே வந்தவுடன் இவர்களின் நட்பு காதலாக மாறியது. இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்.

அமீர் - பாவனி
அமீர் - பாவனி

பாலாஜி முருகதாஸ் - ஷிவானி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனின் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நெருக்கமாக பழகிவந்த நிலையில், ஷிவானியின் அம்மா, பிக் பாஸ் வீட்டுக்கு வந்து ஷிவானியைக் கண்டித்த விடியோ வைரலானது. அதன்பின்னர், எங்களுக்கு இடையே எவ்வித உறவும் இல்லை என்று இருவரும் தெரிவித்தனர்.

பாலாஜி முருகதாஸ் - ஷிவானி
பாலாஜி முருகதாஸ் - ஷிவானி

மஹத் - யாஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் மஹத் - யாஷிகா ஆனந்த் இருவருக்கும் காதலித்ததாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் தனக்கு மஹத் மேல் காதல் வந்ததாக யாஷிகா ஒப்புக்கொண்டார். இவர்கள் வெளியேவந்த பின்னர் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

மஹத் - யாஷிகா
மஹத் - யாஷிகா

விஜே விஷால் - தர்ஷிகா

அண்மையில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் விஜே விஷால் மற்றும் தர்ஷிகா இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், விஜே விஷால் தர்ஷிகாவுடன் காதல் இல்லை என்று பிக் பாஸ் வீட்டில் பதிவிட்டு இருந்தார்.

விஜே விஷால் - தர்ஷிகா
விஜே விஷால் - தர்ஷிகா

பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல் கதைகள் அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்டதுதான் என்றாலும் அந்த நேரத்தில் போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட காதல் என்னவோ உண்மைதான்.

காதல் இன்றுதொட்டு நேற்றுதொட்டு மலரவில்லை. ஆதிக் காலம் முதலே காதல் காவியங்கள் எழுதப்பட்டுள்ளன. காதல் என்பது மனிதர் உயிர்களுக்கு இடையே ஏற்படும் இயற்கையான புரிதல்.. காதல் இல்லையேல் சாதல் என்ற அளவிற்கு எல்லாம் செல்லாமல் ஆதலினால் காதல் செய்வீர் இளைஞர்களே..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com