காதலர்களுக்கான பரிசுப் பொருள்கள்!

காதலர்களுக்கு வழங்க சிறந்த பரிசுப் பொருள்களின் பட்டியல்..
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காதலர் தின பரிசுப் பொருள்கள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காதலர் தின பரிசுப் பொருள்கள்
Published on
Updated on
2 min read

காதலர் தினத்தை முன்னிட்டு, பலரும் தங்களது காதலி/காதலன் அல்லது கணவர்/மனைவிக்கு பரிசுப் பொருள்களை வாங்கி வைத்திருப்பார்கள்.

வாங்காமல் என்ன வாங்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்களுக்காக, இணையதளத்தில் தேடிச் சேகரித்தவை.

பண்டோரா..

பிப்ரவரியில் காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ஏற்கனவே இருக்கும் பல பொருள்களும் இதய வடிவில் உற்பத்தியாகி விற்பனைக்கு வந்துவிடும்.

அந்த வகையில் பெண்கள் கைகளில் அணியும் பண்டோரா என்ற அணிகலன், தற்போது மிக அழகிய இதய வடிவிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடுத்து என்ன எதிர்பார்க்கிறீர்களோ அந்த டாலரை இணைத்தும் பரிசாக வழங்கலாம்.

லவ் பெட்டகம்

உன்னை ஏன் காதலிக்கிறேன் என்று சொல்லும் வாசகங்கள் அடங்கிய, மரத்தில் இதய வடிவத்தில் சின்ன சின்னதாக செதுக்கப்பட்ட அட்டைகளைக் கொண்டிருக்கும் ஒரு பெட்டியை பரிசளிக்கலாம். இது உடனடியாகத் தேவையெனில் ஏற்கனவே இருக்கும் காதல் வாசகங்களைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். இல்லை உங்களுக்கான தனித்துவமான வார்த்தைகள் வேண்டுமென்றால் அவற்றை நீங்கள் வழங்கினால் அச்சிட்டும் பெறலாம். இணையதளத்தில் இவை ரீசன்ஸ் ஐ லவ் யூ கிஃப்ட் பாக்ஸ் என்று தேடினால் கிடைக்கிறது.

புகைப்பட பிரேம்கள்

இது எப்போதுமே பரிசுப் பொருள்களின் பட்டியலிலிருந்து அகலாது. இப்போதெல்லாம் ஒரு சில புகைப்படங்களை தொகுத்து மிக அழகான புகைப்படக் கேலரிகளாவும் வழங்குகிறார்கள். உங்களால் இணையதளத்தில் சிறப்பான பரிசுகளைத் தேடிச் சென்று ஆர்டர் செய்து வாங்க முடிவதில்லை என்றால் இது தான் பெஸ்ட் சாய்ஸ்.

எழுத்துத் திறமை இருக்கா?

நாக் நாக் என்று காதலைச் சொல்லும் புத்தகத்தை வாங்கி, அதில் இருக்கும் தாளில், நீங்கள் எவ்வாறு உங்கள் காதலியை, காதலனை காதலிக்கிறீர்கள் என்று பக்கம் பக்கமாக எழுதிக்கொடுத்து விடுங்கள். நிச்சயம் அது அவர்களுக்குப் பிடிக்கும்.

உணவுப் பிரியர்களுக்கானது..

காதலர் தின சிறப்பாக பல உணவகங்கள் சில சிறப்புச் சலுகைகளை வழங்கும். இதுவரை போகாத உணவகத்தில் இதுபோன்ற சிறப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

காதலர் தின சிறப்பு
காதலர் தின சிறப்புCenter-Center-Bangalore

ஆடை, அணிகலன்கள்

ஒருவருக்கு மிக முக்கியமானதோடு, பிடித்தமானதாக இருப்பது ஆடை, அணிகலன்கள். அவர்களுக்கு நீங்கள் ஏற்கனவே வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஆடையை வாங்கிக் கொடுத்து அசத்தலாம்.

காதலி அல்லது மனைவிக்கான பரிசாக இருந்தால் ஏராளமான அழகு சாதனங்கள் வந்துவிட்டன.

டூயல் பௌச்

இரண்டு பர்ஸ்களை இணைத்து தற்போது புதிய ரூயல் பௌச் வந்துவிட்டது. இதனை இணைத்தும் பயன்படுத்தலாம். ஒரு பௌச்சை நீக்கிவிட்டும் பயன்படுத்தலாம்.

100 புகைப்படம், 100 தேதிகள்

டேட்ஸ் ஸ்க்ராட்ச் போஸ்டர் என்று ஒன்று வந்திருக்கிறது. இதற்கு நாம் 100 தேதிகள் மற்றும் 100 புகைப்படங்களை வழங்கினால் அதனை ஒட்டி ஸ்க்ராட்ச் செய்து பார்ப்பது போல அனுப்புவார்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.

இதுதான் அந்தப் பரிசு
இதுதான் அந்தப் பரிசு

பதப்படுத்தப்பட்ட ரோஜாக்கள்

உண்மையான ரோஜாக்களை பதப்படுத்தி அதனை ஒரு பெட்டகத்தில் அடைத்து பரிசாக வழங்கலாம். உண்மையான ரோஜாக்கள் வாடிவிடும். இந்த ரோஜாக்கள் போல என் காதலும் வாடாது என்பதை சொல்லலாம்.

கணவர்களைக் காப்பாற்ற (தேதிகள் செய்த மாயங்கள்)

நாள்களைச் சொல்லும் புகைப்பட பிரேம் ஒன்று புதிதாக வந்துள்ளது. அதில் தேதிகள் மற்றும் யாருடைய பிறந்தநாள், திருமண நாள் என்று சொல்லி ஆர்டர் கொடுத்துவிட்டால் அழகாக வந்துவிடும். வீட்டில் மாட்டிவிட்டால் பிறந்தநாளை மறந்துவிட்டாயே என்ற சண்டையே வராது. ஆனால் ஃபிரேமைப் பார்க்கத் தவறிவிட்டால் நாங்கள் பொறுப்பல்ல.

மோதிர ஸ்டேண்ட்

மோதிரங்களை மாட்டிவைக்க மிக அழகிய மோதிர ஸ்டாண்ட்கள் வந்துவிட்டன். மிகச் சிறந்த பரிசாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com