காதல் வருவது எப்படி?

இருவருக்குள் காதல் எனும் ஒரே உணர்வு ஒரே நேரத்தில் ஏற்படுவது எப்படி? அறிவியல் சொல்வது என்ன?
காதல் வாழ்த்து அட்டை
காதல் வாழ்த்து அட்டைCenter-Center-Chennai
Published on
Updated on
2 min read

அந்த இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அது வெறும் சொற்றொடர் அல்ல. உண்மையிலேயே, இரண்டு பேர் காதலை உணரும்போது, இருவருக்குள்ளும் நிகழும் உண்மையான வேதியியல் மாற்றத்தைத்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள் என்கிறது அறிவியல்.

அதாவது, மனித மூளையில் உள்ள மீசோலிம்பிக் அமைப்பானது மகிழ்ச்சி மற்றும் உந்துதல்களுடன் தொடர்புடையது. இவை, ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களை செய்யும்போது, மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகள் மூலம், அந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்களை மீண்டும் மீண்டும் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கும் என்கிறார்கள், காதல் மற்றும் உடலுறவு குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட உளவியல் நிபுணர்கள்.

அதாவது காதலில் இருக்கும் வேதியியலை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், இதுவரை காதலுக்கு நாம் இதயத்தின் சின்னத்தையே பயன்படுத்தி வந்தோம். ஒருவேளை இந்த அறிவியல் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால், அது நிச்சயம் இதயம் தொடர்பானது அல்ல, மூளையுடன் தொடர்புடையது என்று புரிந்துகொண்டு இனி மூளை சின்னத்தை மாற்றுவதற்கு போராட்டம் கூட நடத்தலாம்.

ஏனென்றால் காதல் இதயத்தில் தொடங்குவதில்லையாம், மாறாக மூளையில்தான் தொடங்குகிறதாம். அங்கு நடைபெறும் ஹார்மோன் வெளியீடுகள் மற்றும் மூளை இரசாயனங்கள் மூலம்தான் இந்த காதல் என்பதே தூண்டப்படுகிறதாம்.

டோபமைன், செரோடோனின் மற்றும் ஆக்ஸிடாசின் ஆகியவை ஒருவர் பெறும் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்தை உணர உதவும் சில முக்கிய நரம்பியக்கடத்திகளாம். இவற்றின் மூலம் ஒருவரது மூளை, காதலை ஒரு சுழற்சியாக மாற்றுகிறது. அதாவது, ஒருவருடன் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மூளையில் இருக்கும் இந்த நரம்பியல்கடத்திகள் உணரவைக்கும். எனவே, அந்த மூளை அதை மீண்டும் செய் என்று நரம்பியல் கடத்திகளுக்கு கூறுகிறது. அதனால்தான் காதல் ஏற்படுகிறது என்கிறது அறிவியல்.

காதலர் தினம் என்றாலே பூக்கள்தானே..
காதலர் தினம் என்றாலே பூக்கள்தானே..Center-Center-Madurai

காதலுக்கு முன் ஏற்படும் உறவுகள் பற்றி ஏராளமான விஷயங்கள் உள்ளன. இன்னும் 2025ஆம் ஆண்டில் இருக்கும் இளசுகள் இந்த காதலை வகை வகையாப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த விவகாரத்துக்குள் செல்லவே வேண்டாம்.

அன்பின் தனித்துவமான ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இல்லாத ஆனால் இருக்கும் முக்கிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால்,

ஈர்ப்பு, பாலியல் விருப்பம், அன்பு போன்றவை காதலுக்கான திறவுகோல்கள். இதில் எங்கிருந்தும் தொடங்கி காதலில் நிறைவு செய்யலாம். அல்லது தொடங்கிய இடத்திலேயே காதலைத் தொடாமல்கூட நிறைவு செய்துவிடலாம். அது அவரவர் தலைவிதி.

முதலில் உருவாகும் நட்பானது, மெல்ல நெருக்கமாகி காதலாக மாற வாய்ப்புள்ளது. ஒருவருடன் பாதுகாப்பாக உணர்வது அல்லது மகிழ்ச்சியை உணர்வது அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

எல்லாமே வேதியியல்தானா?

ஒருவரது உடலில் வேதியியல் மாற்றங்கள் நடக்கும் போதுகூட அதனை அப்படியே விட்டுவிடாமல், அவரது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களிடமே இருக்கும் என்பதிலிருந்துதான், வேதியியலையும் மூளை வீழ்த்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.

இந்த ஆற்றலால்தான், பலரும் ஒருதலைக் காதல், குடும்பச் சூழல் கருதி காதலை வெளியே சொல்லாமல் இருப்பது போன்றவற்றில் சிக்குகிறார்களோ?

காதலே காதலே
காதலே காதலேCenter-Center-Trivandrum

காதல் தொடர்பான ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகள்தான் ஒருவரது காதல் மற்றும் காதல் வாழ்வில் சக்திவாய்ந்தவர்களாக இருக்கிறார்களாம். ஆனால், அது என்னவோ, ஒருவருக்கு தொடர்பில்லாத அல்லது விருப்பமில்லாததாக இருக்கப்போவதில்லை.

முதலில், நடக்கும் நிகழ்வுகளுடன் ஒருவர் தன்னைத் தானே சரிபார்த்து அது தங்களுக்கு ஏற்றதா என்பதை அறிய அவர்களே அவர்களுடன், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுகளுடன் பேச வேண்டும். அப்போதுதான், அவரது விருப்பம் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

எனவே, காதல், பார்வையால் வந்துவிடுவதில்லை. அதன்பின் இருக்கும் வேதியியல் மாற்றங்களும்தான் காரணம் என்கிறது அறிவியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com