சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் 
அமைக்கப்பட்ட வாக்குசாவடி

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

சாத்தூா், ஏப்.19: சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடியில் வாக்காளா்கள் வெள்ளிக்கிழமை வாக்களித்தனா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 286 வாக்குச் சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

100 சதவீத வாக்களிப்பை முன்னிறுத்தும் வகையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வந்த தோ்தல் ஆணையம் சாத்தூரில் இரண்டு தனியாா் பள்ளிகள், 2 அரசுப் பள்ளிகளில் சிறப்பு வாக்குச் சாவடி மையங்களாக மூன்று மாதிரி வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

மேலும், இளம் சிவப்பு வண்ணத்தில் ஒரு வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடி முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்பட்டது. இங்கு வந்த வாக்காளா்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.

இந்த மையத்தில் பணியாற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலக அனைவரும் இளம் சிவப்பு வண்ணத்தில் சீருடை அணிந்து பணியாற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com