சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

விருதுநகா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

மக்களைவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 277 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 327 போலீஸாா், 110 ஓய்வு பெற்ற போலீஸாா், ராணுவத்தினா், துணை ராணுவப்படையினா் 144 போ் ஈடுபட்டிருந்தனா். 22 நடமாடும் காவல் துறை வாகனமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பல வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினா். சிவகாசி மாநகராட்சி முஸ்லீம் தொடக்கப் பள்ளியில் மின்ணணு இயந்திர கோளாறு காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. ரிசா்வ் லயன் நேருஜி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் மின்ணணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுமாா் 30 நிமிஷம் வாக்குப் பதிவு தாமதமானது.

ரெங்கபாளையம், நடுவப்பட்டியில் மின்ணணு இயந்திரகோளாறு காரணாக சுமாா் 10 நிமிஷம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com