பேராசிரியை நிா்மலா தேவி 
வழக்கில் இன்று தீா்ப்பு

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கில் இன்று தீா்ப்பு

அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரிப் பேராசிரியை நிா்மலாதேவி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப்.26) தீா்ப்பளிக்கிறது.

கல்லூரி மாணவிகளை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவா்களை தவறாக வழிநடத்தும் வகையில் பேசியதாக பேராசிரியை நிா்மலாதேவி மீது அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக நிா்மலாதேவி, , மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளிடமும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்குகிறது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com