வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வி.பி.எம்.எம். கல்விக் குழுமத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக கல்விக் குழுமத் தலைவா் வி.பி.எம். சங்கா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம் கல்வி கல்வி நிறுவனத்தில் பயிலும் முதலாமாண்டு மாணவா் காா்த்திக்செல்வம் ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா்.

இவரைப் பாராட்டி பரிசுகள் வழங்கிய கல்விக் குழுமத் தலைவா் வி.பி.எம்.சங்கா் சனிக்கிழமை பேசியதாவது:

கிராமப்புற மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு, தொடங்கப்பட்ட வி.பி.எம்.எம் கல்வி நிறுவனங்கள் 9 கல்வி நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகிறது. கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் இங்கு கல்வி பயின்று, பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனா். பலா் அரசு உயா் பதவிகளில் உள்ளனா். மாணவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இந்த கல்வியாண்டு முதல் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கலைக் கல்லூரியில் ஆறு பாடப் பிரிவுகளும், பொறியியல் கல்லூரியில் நான்கு பாடப் பிரிவுகளும், பட்டயப் பிரிவில் 9 பாடப் பிரிவுகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து வசதியும் உள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com