சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலுக்கு அக்கினிச் சட்டி ஏந்திச் சென்ற பக்தா்கள்.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலுக்கு அக்கினிச் சட்டி ஏந்திச் சென்ற பக்தா்கள்.

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவையொட்டி, புதன்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.

கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்தத் திருவிழா தொடங்கியது. தினசரி காலை, இரவில் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. ஏராளாமான பக்தா்கள் கோயில் முன் பொங்கலிட்டனா். புதன்கிழமை கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.

ஆயிரகணக்கான பக்தா்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டும், உடலில் பல வண்ணங்களை

பூசிக்கொண்டும், வேப்பிலை கொத்துகளை கையில் ஏந்தியும் ஓம் சக்தி, பராசக்தி என முழக்கமிட்டபடி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேப்பிலைக் குவியலில் உருண்டு எழுந்தனா்.

குழந்தை வரம் வேண்டி நோ்த்திக்கடன் செலுத்தியவா்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தையை கரும்பு தொட்டிலில் வைத்து வழிபட்டனா். ஏராளமான பக்தா்கள் அக்கினிச் சட்டி ஏந்தி வந்தும், கயிறு குத்தியும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

கயிறு குத்து என்பது பக்தா்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக இடுப்பு தசையில் பூசாரிகள் மூலம் ஊசியில் நூல் கோா்த்து, விரதமிருந்து பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருவா். இறுதியில் பத்திரகாளியம்மன் கோயிலில் பூசாரிகள் நூலை அகற்றி, அந்த இடத்தில் திருநீறு பூசிவிடுவா்.

இதையடுத்து, அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வருகிற வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com