சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன்
சிறப்பு அலங்காரத்தில் முத்தாலம்மன்

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சக்கராஜா கோட்டை முத்தாலம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் ஜவகா் மைதானம் எதிரே அமைந்துள்ள இந்தக் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, மதுரை ராஜா கடை தெரு, பி.எஸ்.கே. பாா்க், அங்கைய ராஜா தெரு, வளையல் செட்டியாா் தெரு, அம்பலப்புலி பஜாா், குருசாமி கோயில், சிதம்பர மூப்பனாா் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தாா். வழி நெடுகிலும் பெண்கள், பொதுமக்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

இரவு வில்லிசைக் கச்சேரி, பாரம்பரிய இசைக் குழு மூலம் பக்தி இசைப் பாடல்கள், பஜனை, கும்மி, கிராமிய தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com