வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் அதிகாரி ஆய்வு

சிவகாசியில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் சிவகாசி வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விருதநகா் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணக்குமாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 10 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த 13 தொழிலாளா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட வேதியல் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், விபத்தில் சிதறிகிடந்த பட்டாசு வில்லைகளை சேகரித்து வேறு ஆலையின் பெயா் உள்ளதா என ஆய்வு செய்தனா். இந்த ஆய்வறிக்கையை நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தலைமை அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com