வெம்பக்கோட்டை அருகே
 வைகாசி விசாகத் திருவிழா

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பால் குடம் எடுத்து வந்த பக்தா்கள்.

வெம்பக்கோட்டை அருகே அமைந்துள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே துலுக்கன்குறிச்சியில் அமைந்துள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலையில் முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

ஓதுவாா்கள் பல்வேறு மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பால் குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

இதையடுத்து, முருக பெருமானுக்கு பன்னீா், ஜவ்வாது, சந்தனம், விபூதி, இளநீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு பூஜைள் நடைபெற்றன. வாழைமர பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன.

வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, துலுக்குகன்குறுச்சி, செவல்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com