
பாமாயில் சேர்க்கப்படவில்லை என்ற லேபிள்கள், தற்போது பல்வேறு உணவுப் பொருள்களிலும் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. ஆனால், இது பாமாயில் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர, உண்மையில்லை, விளம்பர தந்திரம். அவ்வளவே.
இதனை இந்திய உணவுப்பொருள் மற்றும் குளிர்பான அமைப்பு தெரிவித்திருப்பதோடு, பாமாயில் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்திவரும் இதுபோன்ற விளம்பரங்கள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறது.
உணவுப்பொருளில் பாமாயில் இல்லை என்று சொல்வது அறிவியல்பூர்வமான உடல்நலக் குறிப்பு இல்லை, வெறும் வியாபார தந்திரம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கடந்த 19ஆம் நூற்றாண்டு முதல் மக்களால் உணவில் பயன்படுத்தப்பட்டு வரும் பாமாயில் தொடர்பாக, தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. சில குறிப்பிட்ட எண்ணெய் நிறுவனங்கள், தங்களது விற்பனையை அதிகரிக்கும்பொருட்டு, இதுபோன்ற வியாபார தந்திரங்களை பயன்படுத்தி, பாமாயில் உடல் நலத்துக்குத் தீங்கானது என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஐஎஃப்பிஏ தெரிவித்துள்ளது.
எண்ணெய் வகைகளிலேயே பாமாயில் எண்ணெய் எப்போதும் விலை குறைவான, பல்வேறு வகையான பயன்பாடுகளுடன், தங்குதடையின்றி கிடைக்கும் எண்ணெய்யாக உள்ளது. எண்ணெய் பட்டியலில் நீண்ட நாள்கள் பாதுகாத்து வைப்பதற்கு ஏற்றதாகவும், அதிக சத்து நிறைந்ததாகவும் உள்ளது.
முதலில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் அதிகம் நம்பி, அதன் அடிப்படையில் உணவுத் தேர்வை மேற்கொள்வதும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதிகம் பரவக் காரணமாகிவிடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறித்து மக்களுக்கு போதுமான ஆழமான புரிதல் ஏதுமின்றி, வெறும் பார்வையாளர்களைக் கவர சாதாரணமானவர்கள் போடும் சுகாதார மற்றும் உடல்நல ஆலோசனை மக்கள் அதிகம் நம்பக் கூடாது.
உண்மையில், மக்களின் ஊட்டச்சத்திலும், சமநிலையான உணவிலும் பாமாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அறிவியலைத் தாண்டி, முன்னணி உணவு நிறுவனங்கள் பாமாயில் கலக்கப்படவில்லை என்ற லேபிளைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறையின் உணவு வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி உணவுத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இது உண்மையில், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கிறது. அதாவது, விவசாயிகள், பாமாயில் உற்பத்தியாளர்கள், அதன் நுகர்வோர் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைக்கிறது என்கிறார்கள்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் டன் உணவு எண்ணெய் நுகரப்படுகிறது. இதில் 9 மில்லியன் டன் பாமாயிலும் அடங்கும்.
எனவே, மக்கள் சுழற்சி முறையில், பாமாயிலையும் உணவில் பயன்படுத்தலாம், அதில் தேவையான ஊட்டச்சத்து இருக்கிறது, ஊட்டச்சத்தை சமநிலைப்படுத்தும். இதுதான் அறிவியல், ஊகமோ, தந்திரமே அல்ல என்கிறார்கள்.
இதையும் படிக்க.. பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.