ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி...
Pressing Cancel Twice Prevent ATM Pin Theft? fact check
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

ஏடிஎம்களில் கார்டுகளைப் பயன்படுத்தும் முன்பு 'கேன்சல்' பொத்தானை இரு முறை அழுத்தினால் ஏடிஎம் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறுவது உண்மையா?

ஏடிஎம் கார்டு மூலமாக மோசடிகள் பல நடக்கின்றன. வங்கி வாடிக்கையாளர் சேவை என்று கூறி போன் அழைப்பில் கார்டு நம்பர், பின் நம்பர் ஆகியவற்றைக் கேட்பது, சரிபார்ப்பு என லிங்க்குகளை அனுப்பி மோசடி செய்வது என பல வழிகளில் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன.

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போதுகூட மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அதற்கு நீங்கள் ஏடிஎம் பயன்படுத்துவதற்கு முன்னதாக ஏடிஎம்மில் 'கேன்சல்'(cancel) பொத்தானை இரு முறை அழுத்த வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்துவதாக தகவல்கள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் இது 'முற்றிலும் தவறான தகவல்' என்று மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு கூறுகிறது.

"இது ரிசர்வ் வங்கியின் பெயரில் தவறாகக் கூறப்படும் ஒரு பதிவு. ஏடிஎம்மில் 'கேன்செல்' பொத்தானை 2 முறை அழுத்தினால் ஏடிஎம் திருட்டைத் தடுக்கலாம் என்ற கூற்று போலியானது, இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை" என்று விளக்கம் தெரிவித்துள்ளது.

நீங்கள் தவறான உள்ளீடுகளை அளித்தாலோ அல்லது தற்போது மேற்கொள்ளும் பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்யவோ 'கேன்சல்' பொத்தான் பயன்படும். உங்களுடைய பரிவர்த்தனை முடிந்துவிட்டதா என ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள 'கேன்சல்' பொத்தானை அழுத்தலாம். மாறாக ஏடிஎம் திருட்டுக்கு உதவாது என்று வங்கிகளும் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில் ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்றும் சில தகவல்களை கூறியுள்ளது.

-> ஏடிஎம் கார்டு நம்பர், பின் நம்பரை யார் கேட்டாலும் கூற வேண்டாம். வங்கிகளிலும் கேட்க மாட்டார்கள்.

-> ஏடிஎம்மில் 'பின் நம்பர்' பதிவிடும்போது கீபேடை மறைத்துக்கொள்ள வேண்டும்.

-> கார்டுக்கு பின்புறம் 'பின்' நம்பரை எழுதிவைக்க வேண்டாம்.

-> ஏடிஎம்மில் பின் நம்பரை அழுத்தும்போது யாரும் அருகில் இருக்கிறார்களா என்று கவனித்துக்கொள்ளவும்.

-> யாரிடமும் கார்டை கொடுக்கவும் வேண்டாம்.

-> கார்டு பயன்படுத்தும் முன் கீபேடு, கார்டு ஸ்வைப் செய்யும் இடத்தில் ஏதேனும் சிறிய பொருள்கள் இருக்கின்றனவா என ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

-> பணம் எடுத்தவுடன் 'கேன்சல்' பொத்தானை அழுத்துவது உங்கள் பரிவர்த்தனை முடிந்ததை ஒருமுறை உறுதி செய்து கொள்ளலாம்.

-> தெரியாத பணப்பரிமாற்றங்கள் நடந்தால் உடனடியாக வங்கிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கவும்.

Summary

Pressing Cancel Twice Prevent ATM Pin Theft? fact check

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com