

டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகள் வந்த பிறகு, ஒருவரது வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனைகள் என அனைத்தும், அவரது சிம் கார்டை அடிப்படையாகக் கொண்டாதாக மாறிவிட்டது.
ஒரு நபரைத் தொடர்பு கொண்டு ஓடிபி கேட்டால், ஓடிபியைக் கொடுக்க வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்து விடுகிறது. சரி, அட்டையின் கடைசி எண்ணைக் கேட்டால், தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விடுகிறது.
பிறகு மோசடியாளர்கள் என்னதான் செய்வார்கள். அதனால், அவர்கள் கண்டுபிடித்திருப்பது சிம்கார்டு மாற்று மோசடி.
இதில், ஒரு சிம் கார்டு எண்ணைக் கொடுத்து, அந்த சிம் கார்டு தொலைந்துவிட்டது அல்லது சேதமடைந்துவிட்டது என்று கூறி புதிய சிம் கார்டை மோசடியாளர்கள் பெற்று விடுகிறார்கள். அந்த சிம் கார்டை மோசடியாளர்கள் ஆக்டிவேட் செய்ததும், அந்த சிம் கார்டு எண்ணில் இருக்கும் அனைத்துத் தகவல்களும் ஓடிபியும் நேரடியாக மோசடியாளர்களுக்கே கிடைத்துவிடும்.
பிறகென்ன யாருக்கும் போன் செய்து ஓடிபி கேட்க வேண்டியதில்லை. எனவே, முதலில் சொன்னது போல, யாரும் தனிப்பட்ட தகவல்களை அடையாளம் தெரியாதவர்களுக்கு பகிர வேண்டாம்.
ஏனென்றால், தனிப்பட்ட தகவல்களைப் பெற்ற பிறகே, ஒருவரது சிம் கார்டு எண்ணைக் கேட்டு மோசடியாளர்கள் செல்போன் சேவை நிறுவனங்களைத் தொடர்பு கொள்கிறார்கள்.
எவ்வாறு அறிவது?
ஒருவேளை, உங்கள் செல்போன் திடீரென சேவையை இழந்துவிட்டாலோ, குறுந்தகவல் அனுப்பவோ, அழைப்புகளை மேற்கொள்ளவோ முடியவில்லை என்றாலும் செல்போன் சிம் ஸ்வாப் செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை எச்சரிக்கிறது.
ஒருவேளை சந்தேகம் ஏற்பட்டால், செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்தைத் தொடர்ந்து கொண்டு புதிய சிம் கார்டை முடக்குமாறு கோரிக்கை வைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.