
ஏஐ எனும் செய்யறிவு தொழில்நுட்பம் மூலமாகவும் தற்போது பண மோசடிகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.
செய்யறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் வேலைகளை எளிதாக்கி வருகிறது. இதனால் நிறுவனங்கள் பலவும் தங்கள் வேலைகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருவதுடன் அதுதொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் செய்யறிவால் ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகள் நடைபெற்று வருகின்றன.
குரல் குளோனிங் ஆள்மாறாட்ட மோசடி!
மோசடி செய்பவர்கள் நம்பகமான குடும்ப உறுப்பினர்களின் குரல்களை குளோன்(பிரதி) செய்ய செய்யறிவைப் பயன்படுத்துகின்றனர்.
இப்போது உங்களுக்கு வரும் போன் அழைப்பில் உங்களுடைய குடும்பத்தினரின் ஒருவரின் குரலில் பேசுகின்றனர்.
ஏதேனும் ஒரு அவசர சூழ்நிலையைக் கூறி அவசரமாக பணம் அனுப்ப கோரிக்கை வைக்கின்றனர். இதனால் குடும்பத்தினரும் நம்பி அவர்கள் கூறும் யுபிஐ எண்ணுக்கோ அல்லது வங்கிக்கணக்கிற்கோ அனுப்புகின்றனர். அதன்பின்னரே இது மோசடி என்று தெரிய வருகிறது.
பெரும்பாலாக மகன் /மகள் குரலில் பெற்றோருக்கு அழைப்பு வருகிறது. தங்களுடைய மகன்/ மகள்தான் சிக்கலில்/ஆபத்தில் இருக்கிறார் என்று நினைத்து பெற்றோர்களும் பணம் அனுப்பிவிடுகிறார்கள்.
அதேபோல நெருங்கிய நண்பர்கள் என்றும் இதுபோன்ற போலி அழைப்புகள் வருகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்..
குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அவசர பணம் கோரி வரும் அழைப்புகளிடம் கவனமாக இருங்கள்.
அவசர நிலையை எப்போதும் சரிபார்த்து உறுதி செய்யுங்கள். வேறு என்னிலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக உறுதி செய்தபின்னர் பணம் அனுப்பவும்.
அழைப்பை உறுதி செய்ய அந்த எண்ணுக்கு வேறு ஒரு எண்ணிலிருந்து போன் அழைப்பு மேற்கொண்டு உறுதி செய்யலாம்.
சம்மந்தப்பட்டவரின் எண்ணுக்கும் ஒருமுறை தொடர்புகொள்ள முயற்சிக்கலாம்.
குரல் கிளோனிங் தொழில்நுட்பம் வாயிலான மோசடிகளை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். போன் அழைப்பு மூலமாக மட்டுமே ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களை உறுதிப்படுத்த வேண்டாம்.
எந்தவொரு பணம் செலுத்தல் முடிவுக்கு செல்லும் முன் கோரிக்கையை சுயமாக சரிபார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.