

உணவு டெலிவரி செய்யும் செயலிகள் மூலம், வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வோர், இனி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சலுகைக் கிடைத்திருப்பதாக ஓடிபி பகிர்வது, தள்ளுபடி விலையில் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் ஓடிபி வரும் அதனை உள்ளிடவும் என்று அழைப்பு வருவது போல தற்போது உணவை கேன்சல் செய்து, நேரடியாக பணத்தை வாங்கும் மோசடிகளும் நடக்கின்றன.
மோசடி செய்யப்படும் தொகை சிறியதாக இருந்தாலும், இதனால் செயலி மீதான நம்பிக்கைக் குறையும் ஆபத்துதான் அதிகம்.
நுகர்வோரிடம் வாங்கிக் கொள்வதாகக் கூறி உணவகத்திடமிருந்து உணவைப் பெற்றுக் கொண்டாலும், பணம் உணவகத்துக்குச் சென்று சேராது.
இதனால், உணவகத்துக்கு ஒரு உணவு நஷ்டம். செயலிக்கு அதன் செயல்பாட்டுக் கட்டணம் நஷ்டம்.
எனவே, செல்போன் செயலி மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துவிட்டால் நிம்மதியாக இருக்கக் கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
டெலிவரி ஏஜென்ட் கொடுக்கும் க்யூஆர் கோடு மூலம் எக்காரணத்துக்காகவும் பணம் செலுத்த வேண்டாம்.
எப்போதும் உணவு ஆர்டர் செய்யும்போது செயலி வாயிலாகவே பணம் செலுத்தலாம்.
உங்கள் உணவுக்கான ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டால், பிறகு டெலிவரி ஏஜென்ட் கொண்டு வந்து கொடுக்கும் உணவை வாங்க வேண்டாம்.
அவ்வாறு வாங்குவதாக இருந்தால் உணவகத்தைத் தொடர்புகொண்டு உண்மையை அறியவும்.
ஒருவேளை, டெலிவரி ஏஜென்ட் உணவை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தினால் செயலியில் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் புகார் அளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.