சௌதியில் தங்கம் விற்பனை! ஆன்லைனில் வாங்குவோர் கவனத்துக்கு...

சௌதியில் குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படும் நிலையில், ஆன்லைன் மோசடி குறித்த எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.
தங்கம் வாங்குவோர்
தங்கம் வாங்குவோர்
Published on
Updated on
1 min read

இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போல அல்லாமல், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தங்கம் விலை நிலையாக இருக்கும் நிலையில், இதனை வைத்து ஆன்லைன் மோசடிகள் நடக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஆன்லைன் மூலம், சௌதி அரேபியாவிலிருந்து தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதிகாரப்பூர்வ இணையதளங்களை நாடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தங்கம் வாங்குவது குறித்து அபிதாபி காவல்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, ஆன்லைனில் சலுகை விலையில் தங்கம் விற்பனை என்று வரும் தகவல்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மோசடியாளர்கள் டெலிகிராம் குழுக்கள், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வலை விரிப்பதாகவும் போலியான தங்கங்களை வாங்கவும் வெறும் டிஜிட்டல் தங்கம் வாங்கவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில், அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் தங்கம் வாங்க வேண்டும் என்று சந்தேகத்துக்குரிய இணையதளங்கள் பற்றி தெரிய வந்தால் உடனடியாக 8002626 என்ற எண்ணில் அழைத்தும், aman@adpolice.gov.ae என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் புகார்களைப் பதிவு செய்யலாம்.

இ-வணிக நிறுவனத்தின் அங்கீகாரத்தை சரிபாருங்கள்.

கடையின் பெயர், முகவரி, பதிவு எண் உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பதிவு செய்து பாருங்கள். முகவரி உண்மைதானா என்று.

காட்டப்படும் தங்கத்தில் சரியான அளவீடுகள் இருக்கிறதா என்பதையும் பார்க்கவும்.

50 சதவீதத்துக்கும் அதிகமான சலுகை விலைகள் என்றால் நம்ப வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com