வங்கிக் கணக்கு பாஸ்வேர்டு இப்படி இருக்கவே கூடாது!

வங்கிக் கணக்கு பாஸ்வேர்டு இப்படி இருக்கவே கூடாது என்று சைபர் துறை நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
வங்கிக் கணக்கு
வங்கிக் கணக்கு
Published on
Updated on
2 min read

சைபர் குற்றங்களுக்கு மோசடியாளர்கள் எவ்வாறு முக்கிய காரணமோ, அவர்களுக்கு உதவும் மக்களும் நிச்சயம் மற்றொரு காரணமாக இருக்கிறார்கள் என்கிறார்கள் சைபர் பாதுகாப்புத் துறை நிபுணர்கள்.

மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தகவல்கள், மோசடியாளர்கள் கைகளில் கிடைப்பதே, மோசடிக்கான முதல் புள்ளி. எனவே, எச்சரிக்கை, கவனம்தான் மக்களுக்கு அவசியம்

நாடு முழுவதும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே, டிஜிட்டல் மோசடிகளும் அதிகமாகவே நடக்கிறது.

இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டிய பல விஷயங்களில் ஆன்டி-வைரஸ்களை அவ்வப்போது அப்டேட் செய்துவைத்துக் கொள்வது, அவ்வப்போது சிஸ்டத்துக்கான பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டுகளை வைப்பது போன்றவை மிக முக்கியம்.

இணையதள வங்கிக் கணக்குக்கோ, மின்னஞ்சல் முகவரி உருவாக்கவோ பாஸ்வோர்ட் உருவாக்கும் போது கவனிக்க வேண்டியவை..

பிறந்த தேதி, குடும்ப உறுப்பினர் பெயர்கள், அடையாள அட்டை எண், தங்களது சொந்த தகவல்களிலிருந்து அல்லது வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை பாஸ்வேர்டாக அமைக்கக் கூடாது.

ஒருவருக்குப் பிடித்த திரைப்படத்தின் பெயர், கதாப்பாத்திரத்தின் பெயர், நடிகர், நண்பர்களின் பெயர்களும் நிச்சயம் கூடவே கூடாது.

அதுபோல, பாஸ்வேர்டு மீட்டெடுப்பதற்கான கேள்விகளும் யாராலும் யூகிக்க முடியாததாகவும் இருத்தல் வேண்டும்.

எவ்வளவுதான் எடக்கு மடக்கான பாஸ்வேர்ட் கொடுத்தாலும் இது பலவீனமாக இருப்பதாக கணினி சொல்லும். அப்போது கோபப்படக்கூடாது.

நமது மூளையின் நினைவுத் திறனைக் கருத்தில் கொண்டு மிக எளிதான பாஸ்வேர்டுகளைக் கொடுக்காமல், சைபர் குற்றவாளிகளின் மூளையைக் கருத்தில் கொண்டு சற்று கடினமான பாஸ்வேர்டுகளை அமைக்க வேண்டும்.

இங்கே மிக முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால், பொதுவாக பலராலும் பயன்படுத்தப்பட்ட மிக மோசமான, பயங்கரமான பாஸ்வேர்டுகள் என சில வெளியாகி வருகிறது.

அது, 1. 123456, 2. password, 3. asdfg (or) qwerty, 4. 12345678, 5. Iloveyou, 6. admin, 7. login, 8. abc123, 9. 654321, 10. password1, 11. computer, 12. 121212, 13. admin123. 14. 1234566 போன்றவை.

இவற்றை ஹேக்கர்கள் மிக எளிதாக முதல் அல்லது இரண்டாவது முயற்சியிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிறார்கள்.

ஒருவேளை இந்த பாஸ்வேர்டுகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் பயன்படுத்தி வந்தால் நிச்சயம் அதனை மாற்றுவது நல்லது. இதுபோல பலராலும் பயன்படுத்துப்படும் பலவீமான 100 பாஸ்வேர்டுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி வருகிறதாம்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அல்லது தனிநபர்களின் விவரங்களை திருடிய ஹேக்கர்கள், நாம் வைக்கும் பாஸ்வேர்டுகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடும் வாய்ப்பே இல்லாத வகையில் பாஸ்வேர்டுகளை அமைக்கலாம். பலமான பாஸ்வேர்டுகளை வைப்பதும், அவற்றை சரியாக ஞாபகம் வைப்பதும் மிக மிக அவசியம்.

பாஸ்வேர்டை பாதுகாப்பது எப்படி?

எந்த கணினியிலும், பாஸ்வேர்டை நினைவில் வைத்துக் கொள்ளும் வசதியை கிளிக் செய்யக் கூடாது.

யாருக்கும் தெரியும் வகையில் வங்கிப் பாஸ்வேர்டை எழுதிவைக்கக் கூடாது.

பொதுவெளியில் கணினி அல்லது வைஃபையைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்ய வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com