

பத்திரிகைகளில் ராசி பலன் என்ற தலைப்பில் 12 படங்கள் இடம் பெறும். அவற்றில் தேள் படமும் ஒன்று. வானத்தில் ஒருவகை நட்சத்திரக் கூட்டம் அமைந்திருக்கிறது. அதை டெலஸ்கோப் மூலம் பார்க்கும்போது தேள் வடிவில் தெரியும்.
அந்தக் கூட்டத்திற்கு விருச்சிகம் ராசி என்பார்கள். இந்த ராசி இனவிருத்தி உறுப்புகளுடன் தொடர்பு கொண்டது. பஞ்சபூதங்களில் நீருடன் அமைந்திருக்கின்றது.
இந்த ராசி உடையவர்களிடம் பயந்த சுபாவமும் நிலையான குணமும் காணப்படும். செவ்வாய்க்கிழமை, பிறந்தவர்கள் அக்டோபர் 22 முதல் நவம்பர் 20 வரை பிறந்தவர்கள் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஏற்ற மரம் கருங்காலி. கருங்காலி மரம் மேற்கண்ட ராசிகளின் மின்கதிர் வீச்சுகளைத் தன் உடலில் சேகரித்து வைத்து அதைத் தொடுபவர்களுக்கு மாற்றி விடுகிறது.
மேலும் கருங்காலி மரம் செவ்வாய் கிரக தோஷத்தையும் நீக்குகிறது. கடந்த இதழ்களில் செவ்வாய் கிரகம் தலைப்பில் கருங்காலி மரத்தின் மகிமைகளைப் பற்றிக் கட்டுரை எண்.6 இல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தனுசு ராசி - அரச மரம்
9 வது ராசி தனுசு, இந்த ராசி தொடை பகுதியைப் பாதிக்கக் கூடியது. பஞ்சபூதங்களில் நெருப்புடன் இது தொடர்பு கொண்டது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு குணம் இருக்கும்.
இவர்கள் பெரும்பாலும் பயணத்திலேயே இருப்பார்கள். வியாழக்கிழமையன்று பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரம் அரசன்.
இந்த மரம் வியாழன் (குரு) கிரக தோஷத்தையும் நீக்குகிறது. மேற்கண்ட ராசி, நட்சத்திரம் கொண்டவர்கள் அரச மரத்தை அரை மணி நேரம் கட்டிப் பிடிக்கலாம். அதன் நிழலில் அமரலாம்.
அதைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டு அதைத் தொடுபவர்களுக்கு வழங்குகிறது. இதைப் பற்றி விளக்கமாக கடந்த இதழ்களில் நவக்கிரக மரம் அரசன் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். தேவைக்கு அதைப் பாருங்கள்.
அரச மரத்தின் பயன்கள்:
சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில் முதன்மையானது அரச மரமாகும்.
அரச மரத்தின் பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்து வந்தால் மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண், சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு கட்டுக் கட்டலாம்.
இதன் வேர் மற்றும் தண்டுப் பகுதியை அரைத்துப் பசையாக்கிப் பூசினால் தோல்நோய்கள் கட்டுப்படும். இதனைக் கஷாயமிட்டு குடித்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும். அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக அமையும்.
அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம். அரச மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டு உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும். அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரைநோய்
போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.
இதுதவிர, இம்மரத்தின் அனைத்துப் பொருட்களும் வயிற்றுப் போக்கு, சீதபேதி, தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல், நரம்புத் தளர்ச்சிஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது எனப் பல்வேறு மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டு இருக்கின்றன.
கருங்காலி மரம், அரசமரம் ஆகியவற்றை வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் காணலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.