

மண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இயக்குநர் செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சுமுகமாகப் பிரிந்து செல்லும் முடிவில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதையடுத்து , சோனியா அகர்வால் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். விவாகரத்து குறித்து கேட்டால்... ""அது தனிப்பட்ட விஷயம். அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இனி , தொடர்ந்து திரைப்படங்களில் என்னைப் பார்க்கலாம். எனக்கு ஏற்ற கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பேன் '' என்கிறார் சோனியா.
பிரிய வரம் கேட்கும் இந்தத் தம்பதியர் குறித்து செல்வராகவனின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரிராஜா கூறும்போது...
"" வருத்தமாகத்தான் இருக்கிறது. "நாங்களாக விரும்பித்தான் பிரிகிறோம் ' என்கிறார்கள். இவர்கள் பிரிந்து வாழ எடுத்த முடிவுக்கு ஒரு நடிகையைக் காரணமாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. சோனியாவை எங்கள் சொந்த மகளாகப் பாவித்து பாசம் காட்டினோம். இப்போதும் அப்படித்தான் கருதுகிறோம். செல்வாவுக்கும் சோனியாவுக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்தால் அந்த மழலை , பிரியத் துடிக்கும் இந்த மனங்களை மாற்றியிருக்கும் '' என குறிப்பிட்டார்.
மீண்டும் "மன்மத லீலை '
கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த "மன்மத லீலை ' படம் , மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை கே.பாலசந்தர் தயாரித்து இயக்கவிருந்தார். இந்நிலையில் "மங்கை ' அரிராஜன் இயக்கத்தில் கீர்த்தி சாவ்லா , தேஜாஸ்ரீ , அக்ஷயா , ராதிகா மல்ஹோத்ரா , மோனிகா நடிக்க "மன்மத லீலை ' என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது என்ற அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து கே.பாலசந்தரிடம் கேட்டபோது...
"" மன்மத லீலை ' தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை நானே ரீமேக் செய்யவுள்ளேன். படத்தின் தலைப்பைப் பயன்படுத்தக் கேட்டு யாரும் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை '' என்றார். "மன்மத லீலை ' ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்க சூர்யா , ஜீவா உள்ளிட்ட சில இளம் நடிகர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
படம் முழுக்க க்ளைமாக்ஸ்!
ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் நடிக்கும் எந்திரன் ' படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இதுவரை இல்லாத வகையில் , இந்தப் படத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மிக விரைவாக படமாக்கி வருகிறார் ஷங்கர். படத்தைப் பற்றி கேட்டால்...
"" எந்திரன் ' படம் உலக சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் , உலக சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களையும் தமிழ்த் திரையுலகம் நோக்கி திரும்பிப் பார்க்க வைக்கும். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி , சென்னை மாயாஜால் மல்டிபிளக்ஸ் வளாகத்தில் புதுமையான "செட் ' டில் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக சில படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்படும். பிரம்மாண்ட படங்களின் "ப்ராண்ட் மார்க் ' எனக் கூறப்படும் ஷங்கரின் படங்களில் அது இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் "எந்திரன் ' படத்தைப் பொருத்தவரை ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஒவ்வொரு காட்சியும் க்ளைமாக்ஸ ý க்கு உரிய பரபரப்போடும் பிரமிப்போடும் இருக்கும். சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் , ஜெயிக்கத் துடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் உத்வேகத்தோடு , ரஜினிகாந்த் அசாத்திய உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார் '' என சிலாகிக்கிறது ஷங்கரின் சிஷ்ய வட்டாரம்.
நட்சத்திரக் கூட்டணி!
சிம்பு-த்ரிஷா நடிக்கும் "விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தையடுத்து ஒரு தெலுங்குப் படத்தை இயக்குகிறார் கெ ü தம் மேனன். இதில் ஆந்திர ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகள் மஞ்சுளா படத்தைத் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளித்து படத்தை இயக்குகிறார் கெ ü தம். படத்தின் தலைப்பு , கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
மகா தீரன்!
ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா , காஜல் அகர்வால் நடித்த "மகாதீரா ' தெலுங்குப் படம் , வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ. 20 கோடி வசூலித்த இந்தப் படம் , மேலும் வசூலைக் குவித்து வருகிறது. ராஜமெ ü லி இயக்கத்தில் வரலாற்றுக் காதல் கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படம் , மொழிமாற்றத்துடன் தமிழில் வெளியாகவுள்ளது. சில தெலுங்கு கதாபாத்திரங்களில் மட்டும் மாற்றம் செய்து , அதில் தமிழ் நடிகர்களை நடிக்க வைத்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. "தீரன் ', " மகா தீரன் ' போன்ற தலைப்புகள் பரிசீலனையில் உள்ளன.
காமெடி வில்லன்கள்!
" ராஜாதிராஜா ' படத்தையடுத்து ஷக்தி சிதம்பரம் இயக்கும் "குரு சிஷ்யன் ' படத்தில் சத்யராஜ் , சுந்தர்.சி முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
"" இது என்னுடைய வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலா படம்தான். குருவாக சத்யராஜும் சிஷ்யனாக சுந்தர்.சி யும் நடிக்கிறார்கள். நட்புடன் இருக்கும் இவர்கள் , ஒரு பிரச்னையில் எதிரிகளாக மாறுகிறார்கள். மீண்டும் இணைகிறார்களா என்பதை காமெடி , அடிதடி , க்ளாமர் கலந்து சொல்லுகிறோம். கதையுடன் கூடிய வடிவேலுவின் காமெடி , ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும். தினா இசையில் பிரபலமான பாடல் ஒன்றை ரீமிக்ஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். என்னுடைய முந்தைய படங்களை விட இந்தப் படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் '' என்றார்.
பர்மா பஜார் கச்சேரி!
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் "கச்சேரி ஆரம்பம் ' படத்தில் ஜீவாவுடன் வடிவேலு முதல்முறையாக இணைந்து நடிக்கிறார். அதனால் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் திரைவண்ணன். "தெனாவட்டு ' படத்தில் அமைதியாக வந்த ஹீரோயின் பூனம்பாஜ்வா இந்தப் படத்தில் அதிரடியான வேடம் ஏற்பதோடு காமெடியிலும் கலக்குகிறாராம். படத்தைப் பற்றி கேட்டபோது...
"" பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் வடிவேலுவிடம் வேலைக்கு சேருகிறார் ஜீவா. அங்கே அவர் சந்திக்கும் பிரச்னைகளும் அதையடுத்து நடைபெறும் சம்பவங்களும்தான் கதை. படத்துக்காக ஃபிலிம் சிட்டியில் ரூ. 25 லட்சம் செலவில் பர்மா பஜார் போன்ற "செட் ' அமைத்துள்ளோம். ஜீவாவின் கமர்ஷியல் வெற்றிப் பட வரிசையில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு '' என்றார் இயக்குநர்.
ஃப்ளாட் ப்ளான்!
அஸின் , த்ரிஷா ஆகியோர் தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் கொடிகட்டிப் பறந்துவிட்டே பாலிவுட்டுக்குப் பறந்தனர். ஆனால் , இதுபோன்ற பின்னணி இல்லாவிட்டாலும் பாலிவுட்டில் பறக்கத் துடிக்கிறார் லஷ்மிராய். அதற்காக , மும்பையில் திரை பிரபலங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு ஃப்ளாட் வாங்க பெரும் தொகையை அட்வான்ஸ ô கக் கொடுத்திருக்கிறாராம்.
குத்துப்பட்ட கத்தாழ!
" கத்தாழ கண்ணால... ' புகழ் ஸ்னிக்தா , " ராஜாதிராஜா ' படத்தின்போது யூனிட்டாருக்கு அதிக சிரமங்கள் கொடுத்தார் என புகார் கூறப்பட்டது. அதையடுத்து வந்த சில வாய்ப்புகளும் அவர் போட்ட "கண்டிஷன் ' களால் பறிபோயின. தற்போது எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாத ஸ்னிக்தா , " நந்தலாலா ' படத்தின ரிலீஸ ý க்காகக் காத்திருக்கிறார். ஆரம்பத்திலேயே அமைதி காத்திருந்தால் இப்போது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்குமா ? என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.