

ரஜினிகாந்த். ஸ்ரீதேவி நடித்து பெரும் ஹிட்டான "ஜானி' மீண்டும் தமிழில் ரீமேக் ஆகிறது. மகேந்திரன் இயக்கியிருந்த இந்தப் படத்தை ரீமேக் செய்து எடுக்க போகிறார் இயக்குநர் செல்வா. நாயகனாக ஜீவன் நடிக்கிறார்.
நாயகி இன்னும் முடிவாகவில்லை. எனினும் சத்யராஜ், சுந்தர்.சி இணைந்து நடிக்க உள்ள "குரு சிஷ்யன்' படத்தில் சுந்தர்.சி ஜோடியாக நடிக்கும் ஹேமமாலினி நடிக்க வாய்ப்பிருக்கிறது.
சுருளிராஜன் நடித்த கேரக்டரில் மயில்சாமி நடிக்க உள்ளார். தற்போது "நான் அவன் இல்லை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் செல்வா இதை முடித்த பின்னர் ஜானியை இயக்குவார் எனத் தெரிகிறது.
போக்கிரிக்கு வான்டட்!
"போக்கிரி' படத்தை இந்தியில் "வான்டட்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் பிரபுதேவா. சல்மான்கான், ஆயிஷா தாகியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
""தமிழில் இடம் பெற்ற நகைச்சுவை மற்றும் பாடல் காட்சிகளை இந்தியில் வேறு மாதிரி மாற்றி இருக்கிறேன். சல்மான் என் சகோதரர் போன்றவர். ஆயிஷாவின் நடனம் பாராட்டும்படியாக இருந்தது. அவரால் படப்பிடிப்பில் எந்த பிரச்னையும் இல்லை. இந்தப் படத்துக்காக ஒன்றரை வருடம் உழைத்திருக்கிறேன்.
இந்தி சினிமாவில் பல ஆண்டுகளாக பணி புரிந்து வந்தாலும் படம் இயக்கும் அனுபவம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் படம் இயக்குவது எனக்கு சுலபமாக இருக்கிறது. இந்தியில் பரப்பரப்பான ஷூட்டிங் தருணங்கள் மறக்க முடியாதவை.
இந்தி படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அவர்களைத் திருப்திப்படுத்துவது சுலபம் கிடையாது. நயன்தாரா விஷயத்தில் நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை'' என்கிறார் பிரபுதேவா.
பொருந்தினால் சென்னை!
"யாரடி நீ மோகினி', "ஜெயம் கொண்டான்', "பஞ்சாமிர்தம்', "வெண்ணிலா கபடி குழு' படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் அறிவழகன் இயக்கியுள்ள படத்தில் நடித்துள்ளார் நடிகை சரண்யா மோகன். "ஈரம்' படம் பற்றி அவரிடம் கேட்ட போது...
"" "ஈரம்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் என் கேரக்டர் நிச்சயம் பேசப்படும் வண்ணம் வந்திருக்கிறது. சினிமா உலகத்தில் க்ளாமர் நடிகையாக நீடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிகையாக நீடிக்க க்ளாமரை நான் என்றும் தேர்ந்தெடுக்க மாட்டேன். க்ளாமர் இல்லாத குடும்பப் பாங்கான வேடங்களில் தொடர்ந்து நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
அதுதான் எனக்கும் பொருந்தும். "வெண்ணிலா கபடி குழு' வெற்றிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. சிலவற்றில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை. "ஈரம்' படம் எனக்கு ஏற்ற படம். தமிழில் எனக்குப் பொருத்தமான கதைகளைக் கேட்டு வருகிறேன். பொருந்தினால் சென்னை வர தயாராக இருக்கிறேன்'' என்றார் சரண்யா மோகன்.
தூசு தட்டினால் ஜெயம்!
பழைய தமிழ்ப் படங்களை சிறிய மாற்றங்களுடன் ரீமேக் செய்வதில் தேர்ந்தவர் இயக்குநர் செல்வா. இவருக்கு முற்றிலும் வித்தியாசமானவர் "ஜெயம்' ராஜா. செல்வா தமிழ் படங்களை ரீமேக் செய்கிறார் என்றால் தெலுங்கில் இருந்து வெற்றி படங்களை மட்டும் தமிழுக்கு இறக்குமதி செய்வது ராஜாவின் பாணி. தெலுங்கில் இருந்து வருவனவற்றில் சில காட்சிகளை மட்டும் மாற்றம் செய்து அவரது தம்பியை வைத்து படமெடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் "ஜெயம்' ராஜா.
"ஜெயம்', "எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', "உனக்கும் எனக்கும்', "சந்தோஷ் சுப்ரமணியம்' படங்களின் வரிசையில் இப்போது புதிதாக சேருகிறது "தில்லாலங்கடி'. இது தெலுங்கில் வெற்றி பெற்ற "கிக்' என்ற படத்தின் தூசு தட்டல். இதற்குப் பிறகு இரண்டு தெலுங்கு படங்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதாம் ஜெயம் கம்பெனிக்கு.
வேடத்துக்கு ஒரு போராட்டம்!
""குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக நடித்த பின்னரும் அந்தக் குழந்தை இமேஜை மாற்ற போராடி வேண்டி இருந்தது. அந்த இமேஜ் மாறாத சமயங்களில்தான் "சிலந்தி' போன்ற படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது "சிலந்தி' படத்திலிருந்து மீண்டு வர மீண்டும் போராட வேண்டி இருக்கிறது.
இப்போதுதான் தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். ஹோம்லி இமேஜ்தான் பாதுகாப்பானது என முடிவு எடுத்து விட்டேன். எனவே அதற்கான படங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். கன்னடத்தில் ஹோம்லி கேரக்டரில் நடித்து வருகிறேன்.
அவர்கள் என்னை ஹோம்லி பெண்ணாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கன்னட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் அந்த மொழியை தற்போது தீவிரமாக கற்று வருகிறேன்'' என்கிறார் நடிகை மோனிகா.
ஒரு லட்சம் தொடங்கி இரண்டு கோடி வரை!
இந்தியில் "துஜேமேரி கஸம்' என்ற படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. அப்படத்துக்கு ஒரு லட்சம் மட்டுமே சம்பளமாகப் பெற்றார்.
தமிழில் "பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமான அவர், அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் கொஞ்ச நாள் பிஸியாக இருந்த அவருக்கு "ஜானே து யா ஜானே நா' படத்தின் மூலம் இந்திக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படம் வெற்றி பெற்றதால் அவரின் சினிமா வாழ்க்கை அடுத்த பரிமாணம் பெற்றுள்ளது. "லைப் பார்ட்னர்', "இட்ஸ் மை லைப்', "யாஹூ' உள்ளிட்ட சில வாய்ப்புகளால் இப்போது அவர் இந்தியில் பிஸி நடிகையாக மாறி இருக்கிறார்.
ஆனால் அதற்கு தகுந்தாற்போல் தன் சம்பளத்தை 2 கோடி வரை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வெளிவந்த "பொம்மரிலு' ஹிட்டுக்குப் பிறகு அவரின் சம்பளம் 1 கோடியை நெருங்கி விட்டது. அதனால் இனி இந்தியில் கேட்ட சம்பளம் கொடுக்கப்படும் என்ற செய்தியை சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
வேடத்துக்கு ஒரு போராட்டம்!
""குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நாயகியாக நடித்த பின்னரும் அந்தக் குழந்தை இமேஜை மாற்ற போராட வேண்டி இருந்தது. அந்த இமேஜ் மாறாத சமயங்களில்தான் "சிலந்தி' போன்ற படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்போது "சிலந்தி' படத்திலிருந்து மீண்டு வர மீண்டும் போராட வேண்டி இருக்கிறது. இப்போதுதான் தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறேன். ஹோம்லி இமேஜ்தான் பாதுகாப்பானது என முடிவு எடுத்து விட்டேன். எனவே அதற்கான படங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். கன்னடத்தில் ஹோம்லி கேரக்டரில் நடித்து வருகிறேன்.
அவர்கள் என்னை ஹோம்லி பெண்ணாக ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கன்னட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் அந்த மொழியை தற்போது தீவிரமாகக் கற்று வருகிறேன்'' என்கிறார் நடிகை மோனிகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.