நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 16: மிதுன ராசி - பலா மரம்

பலாமரம், மா, பலா, வாழை எனப்படும் முக்கனிகளில் ஒன்றாகும். மிதுனம் ராசி கொண்டவர்களுக்குப் பயன்தரும் முக்கியமான மரமாகும். மிதுனம் ராசி, புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. புதன்கிழமை அன்று பிறந்தவர்களுக்க
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 16: மிதுன ராசி - பலா மரம்
Updated on
2 min read

பலாமரம், மா, பலா, வாழை எனப்படும் முக்கனிகளில் ஒன்றாகும். மிதுனம் ராசி கொண்டவர்களுக்குப் பயன்தரும் முக்கியமான மரமாகும். மிதுனம் ராசி, புதன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. புதன்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்களுக்கும் இது அதிக அளவில் பயன்தரக் கூடிய மரமாகும். மேற்கண்ட ராசி, நாள் மற்றும் நேரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் பலா மரத்தை நட்டு வளர்க்கலாம். இவர்கள் தினசரி அரை மணி நேரம் இம்மரத்தைக் கட்டிப் பிடிக்கலாம். அதன் நிழலில் ஓய்வு எடுக்கலாம். இதனால் இவர்களுக்கு பலா மரத்தில் அடங்கியிருக்கும் புதன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளும், மிதுனம் ராசி, நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல கதிர்வீச்சுகளும் மனித உடலுக்கு மாற்றலாகி உடலுக்குப் புத்துணர்வும், வலிமையும் தருகிறது. மேலும் நோயை எதிர்த்துப் போராடும் சக்தியும் உண்டாகிறது. பல நோய்களையும் குணமாக்குகின்றது என மூலிகை சாஸ்திரம் கூறுகின்றது.

பலா மரத்துக்குத் தினசரி தண்ணீர் ஊற்றுவது கடவுளுக்குத் தினசரி பூஜை செய்வதற்குச் சமமாகும் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மருத்துவப் பயன்கள்:

இளந்துளிர்களை எரித்து அதன் சாம்பலை ஒரு சிட்டிகை அளவு எடுத்து காலையில் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணம் பெறும்.

நெறிக் கட்டிகள், கழலைக் கட்டிகள் மீது பலாவின் பால், பிசினுடன் சிறிது காடி (வினிகர்) கலந்து பூசினால் அறுவை சிகிச்சை இல்லாமல் தானாகவே பழுத்து உடையும்.

பலா வேரையும், இலையையும் சேர்த்து அரைத்து 2 கிராம் அளவில் தேனில் கலந்து, தாய்மார்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும்.

பழச்சுளை

இதைக் குறைந்த அளவில் சாப்பிடுவதால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். மலச்சிக்கல் நீங்கும். அதிக அளவில் சாப்பிடுவது தீங்கினை விளைவிக்கும்.

பலாக்கொட்டை

பலாக் கொட்டைகளை வறுத்தோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். சிறிதளவில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் ஆண்மைக்கு வலிமை கிடைக்கின்றது. இந்திரியத்தில் உயிரணுக்கள் உருவாவதற்கு ஒரு வேளைக்கு மூன்று கொட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது.

பலா மரம் பொதுவாக மாலைக்கண் நோய், காயங்கள், சொறி, சிரங்கு, தேமல், கல்லீரல், வீக்கம், அஜீரணம், வாய்வுத் தொல்லை, பசிக்கொடுமை, பூச்சிக் கடிகளின் விஷம், பாம்புக்கடி, பல்வலி, வயிற்றுக் கோளாறுகள், பெரியம்மை, பெண்களின் மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை பலவீனம், ஆண்மைக்குறைவு, காசநோய், உடல்பருமன், சிறுநீர் பிரியாமை போன்றவற்றிற்குப் பயன் தருகிறது.

பயன்கள்

பலா மரத்தின் வேரில் ஃபிளேவனோன், பிரினைல், ஃபிளேவோன் போன்றவை அடங்கியிருக்கின்றன. இது தவிர, இதன் வேர்ப்பட்டை, கட்டைப் பகுதி, இலைகள், கொழுந்து, விதை, கனி எல்லாவற்றிலும் பலவகையான வேதிப் பொருட்கள் அடங்கியிருக்கின்றன. இவைதான் மருத்துவ குணங்களாக, நோய் தீர்க்கும் நிவாரணியாகப் பயன்படுகின்றன.

குறிப்பாக, கல்லீரல் கோளாறுகள், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் புடைச்சல், சளித்தொல்லை, இருமல், மூச்சிரைப்பு, காயங்கள், பித்த, வாத நோய்கள், இரத்தப் போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு பலா மரத்தின் பொருட்கள் மிகச் சிறந்த பலன் தருகின்றன.

பலா பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் இந்திரியம் வெளியேறுதல் தடைபடும். இரத்தப்போக்கு, வாயுத் தொல்லை கட்டுப்படும் என்று மூலிகை மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பலா மரத்தின் பழுத்த, பழுக்காத கனிகளையும், இலை, வேர், வேர்ப்பட்டை மற்றும் விதைகளையும் கொண்டு நேரடியாகவோ அல்லது உலர வைத்துப் பொடி செய்தோ அல்லது பிற மருந்துகளுடன் கலந்தோ பயன்படுத்துவார்கள்.

பலா மரம் பொதுவாக பல இடங்களிலும் காணப்படுகிறது. விசேஷமாக வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்திலும் வளர்க்கப்பட்டு வருகிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com