நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 13: ராசி... நட்சத்திரம் கண்டுபிடிக்க!

 வானவியல் சாஸ்திரத்தைப் பற்றி அனைத்து மதங்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும் இதை இந்து மதத்தில்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மார்க்கம் தோன்றும் முன
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 13: ராசி... நட்சத்திரம் கண்டுபிடிக்க!
Published on
Updated on
1 min read

 வானவியல் சாஸ்திரத்தைப் பற்றி அனைத்து மதங்களிலும் சொல்லப்பட்டிருந்தாலும் இதை இந்து மதத்தில்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். 1400 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மார்க்கம் தோன்றும் முன்பு அரபு மக்கள் கிரகம், ராசி, நட்சத்திர பலன்களைக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல் தங்களின் வாழ்வியலையும் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அளவுக்கு மேல் மூட நம்பிக்கைகளும், ஜோசியர்களின் பித்தலாட்டங்களும் அதிகமாகவே, போலி சாமியார்களும், போலி தெய்வங்களும் உருவெடுக்கவே மக்கள் இறைவனிடம் முறையிடுவதற்குப் பதிலாக ஜோசியக்காரர்களிடமும் தங்கள் குறைகளைக் கூறி நிவாரணம் தேட ஆரம்பித்தார்கள். இதைத் தடுக்கவே இறைவனைத் தவிர இறைவனின் படைப்புகளை வணங்காதீர் என்ற கட்டளை இஸ்லாமியர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் அவர்கள் ஜோசியம் பார்ப்பது, குறி கேட்பது, நாள், நட்சத்திரம், ராசி போன்றவை பார்ப்பதைத் தவிர்த்தனர். இதனால் இஸ்லாமியர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் ராசி பலன், பார்க்கும் பழக்கம் இல்லாததால் அவர்களுடைய ராசி, நட்சத்திரம் சம்பந்தப்பட்ட குறிப்புகள் இருக்காது. அவர்களுக்குரிய ராசி, நட்சத்திரம், கிரகத்தைப் பற்றி அறிய விரும்பினால் கீழ்க்காணும் அட்டவணை அவர்களுக்கு உதவும். இந்த அட்டவணை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

 கீழ்க்காணும் அட்டவணையின் மேல் பகுதியில் 12 ராசிகள், 12 கட்டங்களுக்குள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. அவற்றின் கீழ் 2 வரிசைகளில் இடது பக்கத்தில் நட்சத்திரத்தின் பெயரும், வலது பக்கத்தில் பெயரின் முன் வரும் முதல் எழுத்தும் தரப்பட்டுள்ளது.

 ஒருவரின் பெயர் ராஜேஸ்வரி என்று வைத்துக் கொள்வோம். அவர் பெயரின் முதல் எழுத்து ரா - வில் தொடங்குகிறது. அவர்கள் இந்த அட்டவணையில் ரா என்ற எழுத்தை எங்கு இருக்கின்றது என்று தேட வேண்டும். துலாம் ராசி அட்டவணையில் ரா என்ற எழுத்தைக் காணலாம். அவர்களின் ராசி துலாம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் ரா வின் இடது பக்கத்தில் சித்திரை நட்சத்திரம் என்று எழுதப்பட்டிருக்கின்றது. அதுவே அவர்களின் நட்சத்திரமும் ஆகும். இப்போது ராஜேஸ்வரியின் ராசி துலாம் என்றும், நட்சத்திரம் சித்திரை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 சிலர் அவ்வப்போது பெயர்களை மாற்றிக் கொள்வார்கள். அவர்கள் வங்கிகளிலும், பத்திரங்களிலும் முக்கியமான ஆவணங்களிலும் கையெழுத்திடும்போது, அதில் வரும் முதல் எழுத்தைத்தான் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 உதாரணமாக, டி.ராஜேந்தர் விஜய டி.ராஜேந்தர் என்று பெயரை மாற்றிக் கொண்டாலும், ஆவணங்களில் ராஜேந்தர் இடம் பெறும். ரா இவர் பெயரின் முதல் எழுத்தாக எடுத்துக் கொள்ளலாம்.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com