கைவினை: வெற்றியின் விலாசங்கள்!

மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தரை, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள், வீடு முழுவதும் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள், ஆடம்பரமான பொருட்கள்... இத்தனையையும் ஓரங்கட்டிவிடும், உங்களி
கைவினை: வெற்றியின் விலாசங்கள்!

மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தரை, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள், வீடு முழுவதும் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள், ஆடம்பரமான பொருட்கள்... இத்தனையையும் ஓரங்கட்டிவிடும், உங்களின் செல்ல மகள் ஏதாவது ஒரு போட்டியில் வென்றதன் அடையாளமாக பெற்றிருக்கும் ஒரு ஷீல்டு!

வெற்றியின் விலாசமாகக் கருதப்படும் ஷீல்டுகள் தமிழ்நாடு முழுவதும் பெரிய நகரங்கள் பலவற்றில் தயாரிக்கப்பட்டாலும், கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் ஷில்டுகளுக்கு தனி மரியாதை இருக்கிறது. அதிலும், கும்பகோணம் நானோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஷீல்டுகள் இந்தியாவின் கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதியாகிறதாம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.எம். பஞ்சாமி ஷீல்டுகள் தயாரிப்பில் இருக்கும் நுணுக்கங்கள் பற்றியும் தேவைகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

""ஒரு ஷீல்ட் வேணும்னு' சாதாரணமாகத்தான் சொல்வார்கள் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஃபோட்டோவை மட்டும்தான் கொடுப்பார்கள். நான் கம்ப்யூட்டரில் என்னுடைய ரசனைக்கேற்ப ஷீல்டை டிசைன் செய்து, ஃபோட்டோ பிரிண்ட் எடுத்து, டிசைனுக்கேற்ப ஒட்டி, ஒவ்வொரு ஷீல்டையும் தயாரிப்போம். வாடிக்கையாளரின் மகிழ்ச்சிதான் எங்களுக்குப் பிரதானம். டிசைனுக்கு ஏற்ப, சில ஷீல்டுகளை ஆறுமணி நேரத்திலும் செய்வோம். சிலவற்றை செய்வதற்கு ஆறு நாட்களும் ஆகும். கற்பனைத் திறனை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டே இருந்தால்தான், இந்தத் தொழிலில் நீடிக்க முடியும். இதுதான் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை.

நாகஸ்வரம் செய்யப் பயன்படும் ஆச்சா மரத்தில்தான் ஷீல்ட் செய்கிறோம். இதனுடன் தேவைக்கேற்பவும் ஆர்டருக்கேற்பவும் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அக்ராலிக், பிளைவுட்... போன்ற பொருட்களைப் பயன்படுத்தி ஷீல்டுகளைச் செய்கிறோம்.

பள்ளி, விளையாட்டு அமைப்புகள் என்று பலருக்கும் எங்களின் கலைப் படைப்புகள் செல்வதற்காக 30 ரூபாயிலிருந்து ஷீல்டுகளைச் செய்துதருகிறோம். அதிகபட்சமாக 30000 ரூபாய் வரை மதிப்பிலான ஷீல்டுகளைத் தயாரிக்கிறோம்.

என்னுடைய தொழிலில் நான் சிறப்பாக இன்றளவும் இருப்பதற்கு என்னுடைய தந்தை சொர்ண மூர்த்தியின் ஆசிர்வாதமும், 3"டி' அனிமேஷன் ஆர்டிஸ்ட்டாகப் பணியாற்றும் என்னுடைய மகன்கள் வாசுதேவன் மற்றும் மாதவனும், என்னுடைய மனைவி சரஸ்வதியின் உற்சாகமூட்டலும்தான் காரணம்.

அண்மையில் ரோம் நாட்டிலிருக்கும் ஒரு வாடிக்கையாளருக்காக மிகப் பெரிய ஆர்டர் ஒன்றை செய்து அனுப்பினோம். அந்நாட்டிலிருக்கும் அமைப்பாளர்கள் நாங்கள் செய்து அனுப்பிய ஷீல்டின் வேலைப்பாட்டை வியந்து பாராட்டியது மறக்கமுடியாத அனுபவம்.

பொறுமையும் கற்பனையுடன் ஓவியம் வரையும் திறமையும் இருந்தால் போதும் எவரும் இந்தத் தொழிலை கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பயிற்சியை அளிக்கலாம். ஆர்வமுள்ள பெண்களுக்கும், சுய உதவிக் குழுக்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன்'' என்றார் பஞ்சாமி.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com