ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

நான் நவீனன் ஆனேன் - 20: தங்கவேலுவின் முதுகில் போட்ட சூடு!

நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் முதுகில் சூடு போட்ட தழும்புகள் பல காணப்பட்டன. அவ்வளவும் அவருடைய சித்தி போட்ட சூடுகள்! பால்ய வயதில் அந்த அம்மாளின் கொடுமைகளுக்கு அவர் ஈடுகொடுத்த அனுபவங்களை உருகி வெளியிட்ட

Updated On :

நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் முதுகில் சூடு போட்ட தழும்புகள் பல காணப்பட்டன. அவ்வளவும் அவருடைய சித்தி போட்ட சூடுகள்! பால்ய வயதில் அந்த அம்மாளின் கொடுமைகளுக்கு அவர் ஈடுகொடுத்த அனுபவங்களை உருகி வெளியிட்டார்.

  ஏன் சூடு போட்டாராம் சித்தி?

  அவருடைய குடும்ப வழியில் பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட விரும்பாமல், எந்த பாய்ஸ் நாடக்குழுவிலாவது சேர்ந்து நாடங்களில் நடிக்கவே விரும்பினார். அதோடு ஏதாவது குறை சொல்வதிலும், திட்டுவதிலும், அடிப்பதிலும் அவருடைய சித்தி தன் வெறுப்பை வெளியிட்டு வந்திருக்கிறார். எனவே வீட்டை விட்டு ஓடிவிடும் முடிவுக்குச் சிறுவயதிலேயே வந்துவிட்டார் தங்கவேலு.

  அவரது சொந்த ஊரான காரைக்காலில் திருட்டு பயம் அதிகம். அவர் தந்தை நகை வேலைகள் செய்து சம்பாதித்து வைத்த பணத்தைச் சுவரில் ஓர் உண்டியலைப் போல அமைத்து, அதற்குள் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம். தேவையானபோது அதைத் தோண்டிப் பணம் எடுத்துக் கொண்டு மீண்டும் மூடி வைத்து விடுவார்.

  அதை கவனித்து வந்த தங்கவேலு, ஓர் இரவு உண்டியல் பணத்தை சுமார் ரூ.25 வரை எடுத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடிப் போய்விட்டார். இரவு ரயில் போக்குவரத்து ஓய்ந்து விட, விடியற்காலையில் சென்னைக்கு போய்விட வேண்டும் என்பது அவரது திட்டம்.

  நடு இரவில் விழித்துக் கொண்ட அவரது தந்தை உண்டியல் உடைபட்டு இருந்ததையும், அருகில் படுத்திருந்த மகனைக் காணாமலும், அதிர்ச்சியடைந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து அங்கு பதுங்கி இருந்த தங்கவேலுவைப் பிடித்துவிட்டார். அப்போது சித்தி கொடுத்த தண்டனையே அந்தச் சூடுகள்!

  வேறுசில உறவினர்களின் சிபாரிசால் தங்கவேலுவை அவர் விரும்பியபடியே பாய்ஸ் நாடகக் குழுவில் சேர்க்க சம்மதித்தார் அவரது தந்தை. வீட்டுச் சிறையில் இருந்து விடுபட்ட அவருக்கு யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் வேடங்கள் கிடைத்தன.

  ""நாடகங்களில் வயதான வேடங்கள் தான் கிடைச்சுது. என் நடிப்பில் இருந்த நகைச்சுவையைக் கலைவாணர் கண்டு விட்டு என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்று பல்வேறு நகைச்சுவை வேடங்கள் தந்து திசை திருப்பி விட்டாரு!'' என்றார் தங்கவேலு.

  ""முதுகுச் சூட்டுடன் எப்படி உங்களால் நகைச்சுவையோடு பேசி நடிக்க முடிந்தது?'' தங்கவேலுவிடம் கேட்டேன்.

  சினிமாப் படங்களில் எம்.சரோஜாவுடன் சேர்ந்து நடித்த பிறகு அவர் பிரபலமானார். சேலம் மாடர்ன் தியேட்டர் படங்களில் அந்த ஜோடி பிரபலமாயிற்று.

  சென்னை தி.நகரில் இரண்டு வீடுகள் வாங்கினார். ஒரு வீட்டின் முன் பக்கத்து அறையில் கலைவாணரின் மார்பளவு சிலை ஒன்றை அவர் வைத்திருந்தார்.

  ""ஏன்? முழுச் சிலை வைக்கவில்லை?'' என்று கேட்டபோது-

  ""கலைவாணர் தன் சட்டைப் பையில் வைத்திருந்த பணத்தை எல்லாம் பலருக்கு வாரி வழங்கிய வள்ளல். பிற்காலத்தில் அந்தப் பை காலியாகி விட்டது. முழுச்சிலை வைத்தால் சட்டைப் பையைக் காட்டும்படி இருக்கும். அதைப் பார்க்கும்போது என் மனம் வேதனைப்படும். அதனால் இப்படி மார்பளவு சிலை வைத்திருக்கிறேன்'' என்றார்.

  ஏதேனும் துன்பங்கள் வந்தால் கூட அதை நகைச்சுவையோடு கூறி ஒதுக்கிவிடும் குணத்தை தங்கவேலுவிடம் இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன்.

  அவர் மனைவிக்கு (பெயர் ஞாபகம் இல்லை) பல ஆண்டுகளாக விக்கல் நோய் இருந்து வந்தது. நிறையச் செலவிட்டு மருத்துவம் பார்த்து வந்தார். அதுபற்றிய பேச்சு வந்தபோது அவர் சொன்னார்:  ""இந்த விக்கல் தான் என் வாழ்க்கையில் பெரிய சிக்கல்''

  தங்கவேலுவிடம் ஒரு நல்ல குணம் இருந்து வந்தது. அவரைப் பார்த்து விட்டு விடைபெறுபவர்களிடம் அவர் ""வாழ்க! வளர்க!'' என்பார்.

     தினமணி கதிரில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் சாவி என்னை ஒரு நாள் பெங்களூருக்கு அனுப்பி வைத்தார். ஒரு நாவல் போட்டிக்கு நீதிபதியாகப் பிரபல எழுத்தாளர் சுஜாதா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். போட்டிக்கு வந்த நாவல்களின் முடிவை அவர் அறிவிக்காமல் காலம் கடத்தவே, என்னை அனுப்பி, முடிவைத் தெரிந்து வரச்சொன்னார் சாவி.

  ஜலஹல்லி என்ற இடத்தில் சுஜாதா இருந்த வீட்டைக் கண்டுபிடிக்க நான் பட்டபாடு? ஹா! ரங்கராஜா!

(இன்னும் வரும் )

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.