ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

நான் நவீனன் ஆனேன் - 24: மறக்க முடியாத அந்த ஒரு நாள்!

""பத்திரிகையின் பெயர் "சினிமா எக்ஸ்பிரஸ்' அதற்கு நீங்கள் ஆசிரியர்'' என்று அறிவித்து என் கையைப் பற்றி வலிக்கும்படி குலுக்கினார் ஆர்.கே.   வித்தியாசமான அமைப்பில், அரிய புகைப்படங்கள், சிறப்புச் சினிமாக்

Updated On :

""பத்திரிகையின் பெயர் "சினிமா எக்ஸ்பிரஸ்' அதற்கு நீங்கள் ஆசிரியர்'' என்று அறிவித்து என் கையைப் பற்றி வலிக்கும்படி குலுக்கினார் ஆர்.கே.

  வித்தியாசமான அமைப்பில், அரிய புகைப்படங்கள், சிறப்புச் சினிமாக் கட்டுரைகளுடன் பெரிய அளவில் "சினிமா எக்ஸ்பிரஸ்' தயாரித்தேன். அதை வெளியிட அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை அழைக்கலாம் என்று ஆர்.கேயிடம் தெரிவித்தேன்.

  எம்.ஜி.ஆரைப் பார்த்துப் பேசப் போனார் ஆர்.கே. ""யார் ஆசிரியர்?'' என்று அவர் விவரிக்க, ""நவீனன்'' எனச் சொல்லவே, அப்படியா? ""அவசியம் வருகிறேன் அவர்தான் அதற்குப் பொருத்தமானவர்'' எனப் பாராட்டி விட்டு வர ஒப்புக் கொண்டார்.

  வெளியீட்டு விழா அண்ணா சாலையில் அப்போது இருந்த எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டின் பின் பக்கக் கட்டடத்தில் நடைபெற்றது. பட உலகைச் சார்ந்தவர்களும், நடிகர், நடிகைகளும் முக்கியமான பிரமுகர்களும் வந்திருந்தார்கள். மண்டபம் நிறைந்து இருந்தது!

  எம்.ஜி.ஆருடன் ஆர்.எம்.வீரப்பன், ராஜாராம், பொன்னையன் ஆகிய அமைச்சர்களும் விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள்.

  விழாவில் எம்.ஜி.ஆர். ""நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், இப்படி ஒரு சினிமாப் பத்திரிகை வரவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நேரம் ஒதுக்கிப் படிப்பேன் என்றார்.

  கூட்டத்திற்கு நடுவே எங்கேயோ உட்கார்ந்து இருந்த ஒருவர், என் கையைப் பற்றிக் குலுக்கி விட்டு ""என் பெயர் இளையராஜா. சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். என் இசையமைப்பில் உங்களுக்குத் திருப்தி இருக்குமானால், "சினிமா எக்ஸ்பிரஸில்' என்னைப் பற்றி எழுதினால் மகிழ்ச்சியடைவேன்'' என்றார் அவர்- இசைஞானி இளையராஜா.

  அப்படிப் பலர் என்னைப் பாராட்டியதில் எனக்கு மகத்தான ஆத்ம திருப்தி அன்று ஏற்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸ் இரண்டாவது இதழே 1,50,000 பிரதிகள் விற்பனையாகிப் பிரத்யேக சாதனை புரிந்தது!

  சுமார் மூன்று ஆண்டுகளில் வந்த மாதம் இரு முறை சினிமா இதழில் பணிபுரிந்தபின் தினமணி நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நாள் வந்தது. அந்த தேசியப் பாரம்பரியம் மிகுந்த நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டிய நாள் மாலை 5.10 மணிக்கு அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்த திருமதி பகவான்தாஸ் கோயங்கா அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்.

  12 ஆண்டுகள் வரை தினமணி கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் வரை பணிபுரிந்து வந்த நான் அவரது அறைக்குள் அன்றுதான் நுழைந்தேன்.

  கண்கள் கலங்க அந்த அம்மையார் கூறிய சொற்கள்:

  ""உங்களை இந்த நிறுவனத்தில் இருந்து அனுப்பி வைக்க மனமே இல்லை. உங்களுக்காக என் மாமனாரிடம் (ராமநாத் கோயங்கா) மேலும் பணிபுரிய அனுமதிக்கக் கேட்டுக் கொண்டேன். அப்படி யாருக்கும் நான் மன்றாடியது இல்லை. ஆனால் அவர் மறுத்து விட்டார். ""ஓய்வுபெறும் வயது வந்து விட்டால் அனுப்பி விடவேண்டியதுதானே'' என்று கூறிவிட்டார்! உங்கள் நேர்மை உழைப்பு சுறுசுறுப்பு, ஆற்றல் ஆகியவற்றை இந்த நிறுவனம் இழப்பது, பேரிழப்பு!''

  அவர் தந்த காசோலையைப் பெற்றுக் கொண்டு திரும்பியபோது, உடன் பணிபுரிந்து வந்த அத்தனை ஊழியர்களும் கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்தனர்.

  லிஃப்டில் நான் இறங்கிய போது அந்தப் பணியில் இருந்தவர் சொன்ன வார்த்தைகள். ""சினிமா எக்ஸ்பிரஸில் இருந்து நீங்கள் ஓய்வு பெறப் போகிறீர்களாமே? இனி சினிமா நடிகர்கள்- நடிகைகள் யாரும் இங்கு வரமாட்டார்களா?

  என் பதில்: சிரிப்பு மேலிட்ட மௌனம்

  (முற்றும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.