திரைக்கதிர்: நிதானமாக ஒரு காட்சி!

திரைவண்ணன் இயக்கும் "கச்சேரி ஆரம்பம்' படத்தில் முதல்முறையாக ஜீவா-வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். தெலுங்கு ஹீரோ ஜே.டி.சக்கரவர்த்தி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக நா.முத்துக
திரைக்கதிர்: நிதானமாக ஒரு காட்சி!
Updated on
1 min read

திரைவண்ணன் இயக்கும் "கச்சேரி ஆரம்பம்' படத்தில் முதல்முறையாக ஜீவா-வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். தெலுங்கு ஹீரோ ஜே.டி.சக்கரவர்த்தி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக நா.முத்துக்குமார் எழுதிய "கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்துவிட்டேன்...' என்ற பாடல் காட்சி அண்மையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் ஜெய்ப்பூர், தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி போன்ற கட்டிடங்களின் பின்னணியில் வித்தியாசமாகப் படமாக்கப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்தப் பாடலை 1000 ஃப்ரேம்ஸ் டெக்னிக்கில் படமாக்குகிறார்கள். ஒளிப்பதிவு -வைத்தி. அதாவது, நாம் சினிமாவில் பார்ப்பது ஒரு வினாடிக்கு 24 ஃப்ரேம்ஸ் டெக்னிக்.

அதையே ஒரு வினாடிக்கு 1000 ஃப்ரேம்ஸ் பாணியில் படமாக்குகிறார்கள். ஷங்கரின் "பாய்ஸ்' படத்தில் "எகிறிக்குதித்தேன் வானம் இடித்தது...' "ஸ்லோமோஷன்' பாடலை விட பல மடங்கு நுணுக்கமாக "ஸ்லோயஸ்ட் மோஷன்' பாடலாக உருவாகும் இந்தப் பாடல் காட்சி, இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com