

பாரதிராஜா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி நடித்த சூப்பர் ஹிட் படமான "சிவப்பு ரோஜாக்கள்' ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குகிறார். இதுபற்றி கேட்டபோது...
""சிவப்பு ரோஜாக்கள்' படத்தைத் தயாரித்த கே.ஆர்.ஜி.யே இந்த ரீமேக் படத்தையும் தயாரிக்கிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். கதாநாயகன் வேடத்துக்கு நடிக்க தனுஷ், சிம்பு, ஆரியா, ஜீவன் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இன்றைய சூழலுக்கு ஏற்ப திரைக்கதையில் புதுமையைப் புகுத்தவுள்ளேன். மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவமும் என் தந்தையின் ஆலோசனையும் இந்தப் படத்தை இயக்க உதவும்'' என்றார் மனோஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.