நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 34: பூரம் நட்சத்திரம்-முருக்கன் மரம்

வானத்தில் இரட்டை நட்சத்திரத் தொகுப்பு ஒன்று காணப்படுகிறது. இதற்குப் பூரம் நட்சத்திரம் என்பார்கள். இந்த நட்சத்திரம் சிம்மராசி மற்றும் சூரிய கிரகத்தின் ஆட்சிக்குட்பட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று பிறந்தவர்
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 34: பூரம் நட்சத்திரம்-முருக்கன் மரம்
Updated on
2 min read

வானத்தில் இரட்டை நட்சத்திரத் தொகுப்பு ஒன்று காணப்படுகிறது. இதற்குப் பூரம் நட்சத்திரம் என்பார்கள். இந்த நட்சத்திரம் சிம்மராசி மற்றும் சூரிய கிரகத்தின் ஆட்சிக்குட்பட்டது. ஞாயிற்றுக் கிழமையன்று பிறந்தவர்களுக்கும், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை பிறந்தவர்களுக்கும் பூரம் நட்சத்திரம் ஆட்சி செய்கிறது.

மனநிலை

பூரம் நட்சத்திரத்துடன் தொடர்புடையவர்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். முத்துப் போன்ற பற்கள், இனிமையான பேச்சு உடையவர்களாக இருப்பார்கள், இவர்கள் பெண்களை எளிதில் வசியப்படுத்திக் கொள்வார்கள்.  பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருவாய்க்கும் அதிகமாகச் செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும், உழைத்துச் சம்பாதிப்பதுதான் நல்லது என்று எண்ணி எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். தானம், தர்மம் செய்யும் இவர்கள் பல செயல்களின் பின் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதையும் முன்னதாகவே கணித்து அறியக் கூடிய திறமை படைத்தவர்களாக இருப்பார்கள்.

பாதிப்பு

பூரம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களுக்கு மாரடைப்பு நோய் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் இதய நோய்களை உருவாக்குகின்றன என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. மேலும் வயிற்றுப் பிரச்சினைகள், இருமல், சிறுநீர்க்குறைவு, தோல்வியாதிகள், எலும்பு மூட்டுவலிகள், விரைவாதம், மார்பு வலி, வலிப்பு நோய்கள் போன்ற நோய்களும்  பூரம் நட்சத்திரத்தால் உண்டாகின்றன. இவர்களுக்கு படபடப்பு, நடுக்கம் போன்ற மனநிலைகளும் உருவாகும். இதற்குப் பூரம் நட்சத்திர தோஷம் என்பார்கள்.

இந்த தோஷத்தையும், நோய்களையும் குணப்படுத்த முருக்கன் மரம் பயனுள்ளதாக அமைந்து இருக்கின்றது.

முருக்கன் மரம் பூரம் நட்சத்திரத்தின் நண்பனாகத் திகழ்கிறது. இந்த மரம் பூரம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளையெல்லாம் அந்த கதிர்வீச்சு விழும் காலங்களில் உடலில் சேமித்து வைத்துக் கொண்டு இந்த உலகத்திற்குத் தேவைப்படும்போது அள்ளிக் கொடுக்கின்றது. பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி கொண்டவர்களின் பிரச்னைகளுக்கு முருக்கன் மரம் பயன்தருகின்றது. இம்மரத்தின் அடியில் உட்காரலாம். ஓய்வெடுக்கலாம். அரை மணிநேரம் கட்டிப் பிடிக்கலாம். இந்த மரத்தினால் தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிடலாம். இதனால் பூரம் நட்சத்திரத்தின் தோஷம் நீங்கி நோய்களும் குணம் பெறும். உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

பயன்கள்

முருக்கன் மரப்பூக்களுடன் சம அளவு கழற்சிக்காய் பவுடரைச் சேர்த்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பாராசிட்டமால் மாத்திரைக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம். தலைவலி, ஜலதோஷம், ஜுரம், உடல்வலி மற்றும் இன்ஃபெக்ஷனால் வரும் பாதிப்புகள் நீங்கும்.

முருக்கன் விதைகளை பவுடராக்கி எலுமிச்சைச் சாற்றில் கலந்து பூசினால் அழுகிய புண்கள், சொறி, சிரங்கு நீங்கும். முருக்கன் மர இலைகளை இடித்து அதன் சாறு ஒரு டீ ஸ்பூனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாக்குப் பூச்சிகள் வெளியேறும். மேலும், வயிற்று வலி, மலட்டுத்தன்மை, குழந்தை பாக்கியமின்மை, கர்ப்பப் பை வளர்ச்சியின்மை, சினைப்பை வேலை செய்யாமை, ஆண்களின் இந்திரியத்தில் போதுமான அளவிற்கு உயிரணுக்கள் இல்லாமை, உடலில் உண்டாகும் எரிச்சல், சொட்டு மூத்திரம், தடைபடும் சிறுநீர், இருமல், சீதபேதி ஆகியவை குணம் பெறும்.

விரைவாதம், யானைக்கால் மற்றும் வீக்கமுள்ள இடத்தில் முருக்கன் பூக்களை வைத்துக் கட்டினால் வலி, வீக்கம் குறையும்.

வாணியம்பாடியில் உள்ள முகல் கார்டனில் உள்ள வானவியல் மூலிகைத் தோட்டத்தில் பூரம் நட்சத்திற்குரிய முருக்கன் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அதை அங்கே காணலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com