

வித்தியாசமான படங்களைத் தயாரித்து வரும் எஸ்.பி.பி.சரணின் அடுத்த தயாரிப்பு "நாணயம்'. பிரசன்னா, ராகிணி நடிக்கும் இந்தப் படத்தில் சிபிராஜ் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். மிஷ்கின் உதவியாளர் சக்தி எஸ்.ராஜா படத்தை இயக்குகிறார். ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும் கும்பலைப் பற்றிய இந்தக் கதையில் மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள். இந்தப் படத்துக்காக 70 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வங்கி "செட்' அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ""எந்த ஒரு ஹாலிவுட் படத்தையும் பார்த்து உருவாக்கிய கதை அல்ல. படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்கும். ஒரு ஐந்து நிமிட காட்சிகளைப் பார்க்கத் தவறினால் கூட அடுத்து வரும் காட்சிகளைப் புரிந்து கொள்வது சிரமம். மற்றபடி இது நல்ல படமா, இல்லையா என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்கிறார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.