பண்பலை: தமிழ்ப் பேச்சு... தந்த வாய்ப்பு!

சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமன்றி மதுரை, நெல்லை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் பல்வேறு எஃப்.எம். ரேடியோக்கள் சக்கைபோடு போடுகின்றன. ""நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பும், பொது அறிவும், நாட்டு ந
பண்பலை: தமிழ்ப் பேச்சு... தந்த வாய்ப்பு!
Updated on
2 min read

சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமன்றி மதுரை, நெல்லை போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் பல்வேறு எஃப்.எம். ரேடியோக்கள் சக்கைபோடு போடுகின்றன. ""நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பும், பொது அறிவும், நாட்டு நடப்பு விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும். சும்மா... இத் துறையில் ரேடியோ ஜாக்கிகளாக களம் புகுந்து அசத்தலாம். கூடவே நல்ல வருமானம் ஈட்டுவதுடன், நேயர்களின் அபிமான நட்சத்திரமாகவும் ஆகிவிடலாம்'' என்கிறார் மதுரை ஹலோ எஃப்.எம்-ல் ஆர்.ஜெ.யாக பணியாற்றும் செல்வ கீதா.

ஹலோ எஃப்.எம். ரேடியோ பண்பலையில் "அவசரக் கோழி' நிகழ்ச்சியை அவசர, அவசரமாக முடித்துவிட்டு கேபினில் இருந்து வெளியே வந்த செல்வ கீதா நம்மிடம் ரிலாக்ஸôக பேசியதிலிருந்து...

""எனது சொந்த ஊர் தூத்துக்குடி அருகே உள்ள முரப்பாடு. சிறுவயதில் இருந்தே வானொலி மீது எனக்கு ரொம்ப ஈர்ப்பு. 12 வயது இருந்தபோது சகோதரர் அனுப்பிய கடிதம் மூலம் இலங்கை னொலியின் "பிறந்த நாள் வாழ்த்துகள்' நிகழ்ச்சியில் எனது பெயர் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டது முதல், வானொலியில் எனது குரலும் ஒலிக்க வேண்டும் என்ற "கனவு' ஏற்பட்டது.

சென்னையில் உள்ள இக்னேμயஸ் கான்வென்டில் பள்ளிப் படிப்புக்குப் பின்னர், நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் வேதியியலில் பி.எஸ்சி.யும், பின்னர், சமூகவியலில் எம்.ஏ.யும் முடித்தேன்.

கல்லூரி நாள்களின்போது கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற வினாடி-வினா போட்டியில் கலந்துகொண்ட சமயம், நிகழ்ச்சிக்காக வந்திருந்த வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் வானொலியில் சேருவதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற ஆவலுடன் கேட்டேன்.

எனது ஆர்வத்திற்கு தடை போட விரும்பாத அவர், கவிதைப் பூக்கள் நிகழ்ச்சிக்கு உடனடியாக ஒரு கவிதை எழுதித் தர முடியுமா எனக் கேட்டார். நான் எழுதியது அவருக்குப் பிடித்துப் போகவே, அக் கவிதை வானெôலியில் வந்தது. அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. தொடர்ந்து சில ஆண்டுகள் கவிதைப் பூக்கள் நிகழ்ச்சிக்கு கவிதை எழுதிக் கொடுத்தேன். அதன்பிறகு, திருமணம் முடிந்து மதுரை வந்தேன்.

தொடர்ந்து, கணவர் ஊக்குவிப்பால் மதுரை வானெ லியில் "கேஸýவல்' அறிவிப்பாளராக தொடர்ந்து 6

ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது, ஒரு நிகழ்ச்சியை எப்படி சிறப்பாக செய்வது, எடிட் செய்வது என்பதை அங்குதான் அறிந்துகொண்டேன்.

2007-ம் ஆண்டில், மதுரையில் ஹலோ எஃப்.எம். தொடங்குவதாக அறிந்தேன். அதற்கான நேர்காணலில் கலந்துகொண்டபோது எனது குரல் வளத்துக்காக மட்டுமன்றி தமிழின் மீதான ஆர்வத்திற்காகவும் ரேடியோ ஜாக்கி பணி கிடைத்தது.

தமிழ் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் "ரேடியோ ஜாக்கி' வேலை கிடைக்கக் காரணம்.

ஹலோ எஃப்.எம்.மில் முதன்முறையாக "டைரி' என்ற நிகழ்ச்சியை வழங்கினேன். இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கணவர்- மனைவி இடையிலான கருத்து வேறுபாடு, காதல் பிரச்சனை என்பது தொடர்பான பல கடிதங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் ஆறுதல் கூறும் நிகழ்ச்சியாக இருந்ததால் பிரபலம் ஆனது.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் கூட இணைந்த நிகழ்வுகள் உண்டு. மீடியா மூலம் மனங்களை ஒன்றுபடுத்த முடியும் என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம்தான் தெரிந்துகொண்டேன்.

அதன்பிறகு தற்போது காலையில் 8 முதல் 10 மணி வரையில் ஒலிபரப்பாகும் "அவசரக் கோழி' நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கும் வானொலிப்

பிரியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. "அவசரக்கோழி' நிகழ்ச்சியில் பொது அறிவு சார்ந்த விஷயம், பொதுவான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிப்பது மற்றும் பேச்சு வழக்கில் நடப்புச் செய்திகளை எடுத்துக் கூறுவது, பொதுமக்கள் சார்ந்த பிரச்னைகளை அலசுவது போன்றவை உண்டு. இந்த நிகழ்ச்சிக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது ரேடியோ ஜாக்கி பணியில் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. இது திருப்தியாக உள்ளது. இளம் பெண்களுக்கு இத் துறையில் நல்ல வாய்ப்பு உள்ளது. சுதந்திர உணர்வுடன் நிகழ்ச்சியும் நடத்த முடிகிறது. முகம் தெரியாத நேயர்கள் பலரிடமும் பிரபலமாகும் வாய்ப்பும்

கிடைக்கிறது. இது சாதிப்பதற்கு ஓர் களம் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்கிறார் கலக்கலாக செல்வகீதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com