

அண்மையில் சூர்யாவும் ஜோதிகாவும், இயக்குநர் கெüதம் மேனனையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜையும் விருந்துக்கு அழைத்திருந்தனர். கெüதமை அழைத்ததை ஹாரிஸிடமும் ஹாரிûஸ அழைத்ததை கெüதமிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த இந்தக் கலைஞர்கள் விருந்துக்காக சூர்யா-ஜோதிகாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போதுதான் இருவரும் அழைக்கப்பட்டிருப்பது புரிந்தது. "உம்'மென்று இருந்தவர்களை கை குலுக்கச் செய்து, இருவரையும் மனம் விட்டுப் பேசச் செய்து, விருந்தோம்பல் செய்திருக்கிறார்கள். நட்சத்திரத் தம்பதியின் இந்த நல்லெண்ணம் நாலாபுறமும் பரவட்டும்.
**************************
அம்பானிக்குப் பிடித்த இசை!
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான தொழிலதிபர் அம்பானியின் விருப்பம் பொழுதுபோக்கு திரைப்படங்களைப் பார்ப்பதுதான்.
பொழுதுபோக்கு படங்கள்தான் தனக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக அடிக்கடி குறிப்பிட்டுள்ள அம்பானியை அண்மையில் நம் தமிழக இசையமைப்பாளர் சுந்தர்.சி பாபு மும்பையில் நேரில் சந்தித்திருக்கிறார்.
""உலகின் மிக பிஸியான மனிதர்களுள் ஒருவர் அம்பானி. அப்படிப்பட்டவர் எனக்கு நேரம் ஒதுக்கி என்னுடைய இசையைப் பாராட்டினார். விரைவில் ஹிந்திப் படங்களுக்கு இசையமைக்க வேண்டும்; இந்திய அளவில் புகழ் பெற வேண்டும் என வாழ்த்தியதை என்னால் மறக்க முடியாது'' என்கிறார் சுந்தர்.சி பாபு.
**************************
ஆதியுடன் ஆர்யா!
"மிருகம்', "ஈரம்' படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதிக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனாலும் படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து வருகிறார்.
"ஈரம்' படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால்வர்மா தன்னுடைய அடுத்த ஹிந்திப் படத்தில் ஆதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ஆதியுடன் ஆர்யாவும் இணைந்து மிரட்டப்போகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.