சொல் புதிது!

  காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல; காதலும் வாழ்க்கை என்ற பழைய கருத்தை மையமாக வைத்து "இளமை இதோ இதோ' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரிஜெகன்னாத்தின் உதவியாளர் பி.ராஜா படத்தை இயக
சொல் புதிது!
Updated on
1 min read

  காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல; காதலும் வாழ்க்கை என்ற பழைய கருத்தை மையமாக வைத்து "இளமை இதோ இதோ' என்ற புதிய படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் பூரிஜெகன்னாத்தின் உதவியாளர் பி.ராஜா படத்தை இயக்குகிறார். ""சொல்லாத கருத்து என எதுவும் இல்லை; அதை சொல்லும் பாணியில்தான் புதுமை இருக்க வேண்டும்.

அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம். மெúஸஜ் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு படத்தை எடுக்காமல் போகிற போக்கில் கதையோடு ஒரு நல்ல மெúஸஜை சொல்லியிருக்கிறோம். அதற்கு ராஜ்கண்ணனின் வசனம் பெரிய அளவில் உதவியிருக்கிறது.

காதலில் தோல்வியுற்றதால், காதலுக்கு எதிரியாக மாறி காதலர்களைப் பிரிப்பதையே கட்சியின் கொள்கையாக வைத்திருக்கும் கா.க.க. (காதலுக்கு கல்லறை கட்டும் கழகம்) என்ற கட்சியின் தலைவராக வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் வரும் விவேக்கின் காமெடி படத்துக்கு பலமாக அமையும்'' என்கிறார் இயக்குநர் பி.ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com