நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 30: புனர்பூசம் நட்சத்திரம் - மூங்கில் மரம்

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 30: புனர்பூசம் நட்சத்திரம் - மூங்கில் மரம்

வானத்தில் வில் வடிவத்தில் ஐந்து நட்சத்திரக் கூட்டம் ஒன்று இருக்கிறது. இதற்குப் புனர்பூசம் நட்சத்திரம் என்று பெயர். இது புதன் கிரகம் மிதுனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. புதன் கிழமை பிறந்தவர்களையும் மே 2
Published on

வானத்தில் வில் வடிவத்தில் ஐந்து நட்சத்திரக் கூட்டம் ஒன்று இருக்கிறது. இதற்குப் புனர்பூசம் நட்சத்திரம் என்று பெயர். இது புதன் கிரகம் மிதுனம் ராசியுடன் தொடர்பு கொண்டது. புதன் கிழமை பிறந்தவர்களையும் மே 21 முதல் ஜூன் 20 வரை பிறந்தவர்களையும் ஆட்டிப் படைக்கும் நட்சத்திரமாகும். மேற்கண்ட நாட்களில் புனர்பூசம் நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியை நோக்கி வரும். அதை மூங்கில் மரங்கள் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும். அதுவே அம்மரத்தின் நற்குணமாகக் காணப்படுகின்றன.

புனர்பூசம் நட்சத்திரம் சிலசமயம் கெட்ட மின்கதிர்களையும் வீசும். அது மனிதர்களுக்கு பலவகையான உடல் பிரச்சினைகளையும், மனப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நோய்களையும் தீர்த்து வைக்க மூங்கில் மரம் உதவுகிறது.

  புனர்பூசம் தோஷம் நீங்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினசரி 30 நிமிடங்கள் மூங்கில் மரத்தைக் கட்டிப்பிடிக்கலாம். இதனால் புனர்பூசம் நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் நீங்கி நோய்கள் குணம் பெறுகின்றன. நல்ல கதிர்வீச்சுகள் மனித உடலுக்கு மாற்றலாகிவிடுகிறது. இம்மரத்தின் நிழலிலும் உட்காரலாம். இதனால் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் கிடைக்கிறது.

 புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்களுக்குத் தொடர்புள்ள நோய்கள்:

தொழுநோய், தோல்நோய்கள், தோல் வெளுத்து விடுதல், மூட்டுவலி, வலியுடன் கூடிய மாதவிலக்கு வெளியேறுதல், வாயுத் தொல்லை, குடல் புழுக்கள், சிறுநீர்க்குறைவு, உடல் பலவீனம், இரத்த சோகை, நாள்பட்ட காய்ச்சல், ஆண்மை சக்தி குறைபாடு போன்றவையாகும்.

மூங்கில் மரத்தின் மருத்துவ குணங்கள்:

  இலைகள்:

  இதன் இளந்தளிர்கள் ஐந்து கிராம் அளவில் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் கஷாயத்தைக் குடிப்பதால் மாதவிலக்குக் காலங்களில் வரும் வலிகள், நாக்குப் பூச்சித் தொல்லைகள், இரத்த வாந்தி, வயிற்றுப் புண், மூட்டுவலி, ஆஸ்துமா, மூட்டுவலி, பக்கவாதம், நாள்பட்ட காய்ச்சல், கண்நோய்கள், பித்த நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கு குடிக்கச் செய்வார்கள்.

  விதைகள்:

  ஒரு கிராம் விதையைத் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது.

வேர்:

வேரை எரித்துப் பவுடராக்கி ஏழு கிராம் அளவில் எடுத்து எண்ணெயில் கலந்து பூசினால் அம்மைத் தழும்புகள் நீங்குகின்றன. வழுக்கைத் தலை, சொறி, சிரங்குகள் குணம் பெறுகின்றன.

மூங்கிலுப்பு:

 முற்றிய மூங்கிலைப் பாதியாகப் பிளந்தால் வெள்ளை நிறப் பொருள் கிடைக்கும். இதற்கு மூங்கிலுப்பு என்பார்கள். இதை ஒரு கிராம் முதல் ஐந்து கிராம் வரை தினசரி சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு, தலை சுற்றல், வயிற்றுப் புண், பித்த வாந்தி குணம் பெறுவதுடன் இதயம், வயிறு, கல்லீரலுக்கு வலிமையும் தருகிறது.

  மூங்கில் உப்பைப் கொண்டு பிரபல யுனானி மருந்து கம்பெனிகளில் காஃபூரி லூலுயி, குர்úஸ தபாஷீர், ஜவாரிஷ் தாபஷீர் என்ற பெயர்களில் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதையும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தலாம்.

 வாணியம்பாடியில் உள்ள டாக்டர் அக்பர் கவுஸரின் முகல் கார்டன் வானவியல் மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதையும் காணலாம்.

(தொடரும்)  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com