காவிரி டெல்டா மாவட்டங்களில் தலைதூக்கும் ரெüடியிஸத்தை ஒடுக்குவதற்காக மீண்டும் ஒரு என்கெüண்டரை நடத்தியுள்ளது போலீஸ். இம்முறை நடந்த என்கெüண்டரில் வீழ்த்தப்பட்ட ரெüடி குரங்கு செந்தில், பிரபல ரெüடி மணல்மேடு சங்கரின் வலதுகரமாக இருந்தவன். திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை எப்படியும் தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருந்தான் குரங்கு செந்தில். அதனால் அவனை போலீஸ் என்கெவுண்டர் செய்தது.
டெல்டா மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முட்டை ரவி தலைமையில் ஒரு ரெüடி கோஷ்டியும், மணல்மேடு சங்கர் தலைமையில் ஒரு ரெüடி கோஷ்டியும் அராஜகச் செயல்களில் ஈடுபட்டு அம்மாவட்ட மக்களின் நிம்மதியைப் பறித்தன. பிறகு இந்த ரெüடி கோஷ்டிகளின் தலைவர்கள் அரசியல் அரிதாரம் பூசிக்கொண்டு தங்களது தொழிலை மேலும் விரிவுபடுத்தினர். முட்டை ரவி மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திலும், மணல்மேடு சங்கர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலும் அங்கம் வகித்தனர்.
முட்டை ரவி திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக அப்போது இருந்த பூண்டி கலைச்செல்வனுக்கு பக்க பலமாக இருந்தான். அதனால் ரவிக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வந்தார் அந்த மாவட்டச் செயலாளர். இதனாலேயே கலைச்செல்வனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டது மணல்மேடு சங்கர் தரப்பு.
இந்த நிலையில் போலீஸôர் முட்டை ரவியை என்கெüண்டர் செய்தனர். இதனால் பூண்டி கலைச்செல்வனுக்கு மணல்மேடு சங்கர் க்ரூப்பால் ஆபத்து அதிகமானது. இதையொட்டி மணல்மேடு சங்கரும் போலீஸ் என்கெüண்டரில் கொல்லப்பட்டான்.
என்கெüண்டர் செய்யப்பட்ட மணல்மேடு சங்கரின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கே உடலை பெற்றுக்கொள்ள வந்த அவனது தாய் பூபதி, ""என் ஒரே மகனை அநியாயமாக போலீûஸ வைத்துக் கொலை செய்ய வைத்தவர்களை குடும்பத்தோடு அழிக்காமல் விடமாட்டேன்'' என்று சபதமே செய்தாராம்.
மணல்மேடு சங்கர், அவன் கோஷ்டியில் இருந்த குற சிவா ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், டீமின் கேப்டனாக குற நடராஜனும், அவனுக்குத் துணையாக கரம்பை ஆனந்த், குரங்கு செந்தில் ஆகியோரும் பவனி வந்தார்கள். கரம்பை ஆனந்த் கொலை செய்வதற்குரிய "லொக்கேஷன்' பார்ப்பதில் படு கில்லாடி. அந்தக் கொலையை செய்து முடிப்பதில் குற நடராஜனும், குரங்கு செந்திலும் கைதேர்ந்தவர்கள்.
இந்நிலையில், குரங்கு செந்தில் தலைமையிலான டீம், ஆயுதப்படை போலீஸ் காவலுடன் இருந்த பூண்டி கலைச்செல்வனை 2007ஆம் ஆண்டு அவரது வீட்டிலேயே வெட்டிச் சாய்த்தது. அவர் மறைந்த பிறகு அவரது தம்பி பூண்டி கலைவாணன் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆனார். "குடும்பத்தோடு தீர்த்துக் கட்டும் சபதத்தின்' விளைவாக இவரையும் குறி வைத்தது குரங்கு செந்தில் கோஷ்டி. வருகின்ற தீபாவளிக்குள் கலைவாணனை எப்படியும் தீர்த்துக் கட்டிவிடுவது எனத் திட்டம் தீட்டியிருக்கிறது.
இதை மோப்பம் பிடித்துவிட்ட போலீஸ், குரங்கு செந்திலின் நண்பன் விஜய் ஆனந்த் மூலமாக குரங்கு செந்திலின் இருப்பிடத்தை அறிந்தது. பழுதடைந்த தனது துப்பாக்கியை ரிப்பேர் செய்வதற்காக அவன் திருச்சியில் இருப்பதாக போலீஸýக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் குரங்கு செந்திலை திருச்சி கல்லணை சாலையில் வேங்கூர் என்னுமிடத்தில் மடக்கிப் பிடிக்க முயற்சித்தபோது, அவன் போலீûஸத் தாக்க, அந்த இடத்திலேயே "என்கெüண்டர்' நடந்தது.
குரங்கு செந்தில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் என்ஜினியரிங் மாணவனாக இருந்தபோது ரெüடி மணல்மேடு சங்கருடன் தொடர்பு ஏற்பட்டு சிறுசிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான். படிக்கும் காலத்தில் என்ஜினியரிங் கல்லூரி ஹாஸ்டலுக்கு வரும் பெண்களை கிண்டல் செய்வது, தட்டிக் கேட்பவர்களை அடித்து உதைப்பது இவனது ஸ்டைலாம். வகுப்பறைக்கே குடித்துவிட்டு வந்து ஆசிரியர்களுடன் பிரச்சினை பண்ணுவானாம். இரண்டு ஆண்டுகளோடு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழு நேர ரெüடியாக உருவெடுத்திருக்கிறான். ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏழெட்டு பெரிய வழக்குகள் இவன் மீது உள்ளன.
பூண்டி கலைவாணனுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தும் ரெüடிகளில் மிக முக்கியமானவன் "குற' நடராஜன். இவனது சகோதரன் "குற'சிவா ஏற்கெனவே முட்டை ரவி க்ரூப்பால் வெட்டிக் கொல்லப்பட்டான். இதற்கு பூண்டி கலை சகோதரர்களின் மறைமுக ஆசியுண்டு என்கிற சந்தேகம் நடராஜனுக்கு உண்டு. அதனால் கலைவாணனைத் தீர்த்துக் கட்ட வியூகம் வகுத்துச் செயல்பட்டுள்ளான். அதற்கு குரங்கு செந்தில் ஆக்டீவாக உதவுவான் என்பதால் அவனைக் கண்காணித்தது போலீஸ். அதன் பலனாகவே குரங்கு செந்தில் என்கெüண்டரில் சிக்கினான். குற நடராஜனுக்கும் இதே மாதிரி "என்கெüண்டர்' காத்திருக்கிறது என்பதே லோக்கல் போலீஸில் இப்போதுள்ள பேச்சு.
டெல்டா மாவட்டங்களில் ரெüடிகளைக் கட்டுப்படுத்த தஞ்சை மாவட்டத்திற்கு செந்தில்வேலனை எஸ்.பி.யாக அண்மையில் நியமித்தது தமிழக அரசு. ஆனால் என்கெüண்டர் செய்வதற்கு மத்திய மண்டல ஐ.ஜி.யான கரன்சின்ஹா போலீஸôருக்கு அவ்வளவு சீக்கிரம் ஒப்புதல் தரமாட்டார். இதனால் அவர் பத்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றிருந்த நேரத்தில், ஏற்கெனவே திருச்சியில் இரண்டு ரெüடிகளை என்கெüண்டர் செய்த போலீஸ் ஐ.ஜி. திரிபாதியை மத்திய மண்டல பொறுப்பு ஐ.ஜி.யாக நியமித்தார்கள். அவர் தலைமையிலான போலீஸ், ரெüடிகளின் நெட் ஒர்க்கை கவனமாகக் கண்காணித்து குரங்கு செந்திலின் கதையை முடித்திருக்கிறது.
திருச்சி மண்டல ஐ.ஜி.யாக ஜாஃபர் சேட் இருந்த போதே "ரெüடிகள் ஒழிப்பு' ஆப்பரேஷன் துவங்கிவிட்டது. அதன் மீதிப் பணியை இப்போது ஐ.ஜி. திரிபாதி முடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.