

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் புதிய படம் "காதலுக்கு மரணமில்லை'. இந்தப் படத்தில் கதை, வசனகர்த்தாவாகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். படத்தைப் பற்றி கேட்டபோது...
""காதலர்களுக்கு மரணமுண்டு; காதலுக்கு மரணமில்லை என்பதுதான் படத்தின் கரு. இது சராசரி காதல் படம் இல்லை. "நெஞ்சம் மறப்பதில்லை', "அலைகள் ஓய்வதில்லை', "பயணங்கள் முடிவதில்லை', "காதல்' போன்ற படங்களின் வரிசையில் ஒரு காதல் காவியமாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் தமிழில் ஒரு "டைட்டானிக்' எனலாம்.
நான் அறிமுகப்படுத்திய பலர் இன்று இந்திய அளவில் சாதனையாளர்களாக மின்னிக்கொண்டிருக்கிறார்கள். இடைக்காலத்தில் எதிர்பாராத சில சம்பவங்களால் சிறு தடை ஏற்பட்டது. தற்போது புதுப் பொலிவுடன் மீண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் பெரிய வெற்றி பெறும். அதன் பிறகு மீண்டும் பல திறமையானவர்களைத் திரையுலகில் அறிமுகப்படுத்துவேன்' என்று நம்பிக்கையுடன் கூறினார் கே.டி.குஞ்சுமோன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.