நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 26: கிருத்திகை நட்சத்திரம் - அத்தி மரம்

பெரும்பாலான அரசியல்வாதிகளின் பிறந்த நட்சத்திரம் கிருத்திகையாகவே இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20 வரை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்த
நோய் தீர்க்கும் ராசி மரங்கள் - 26: கிருத்திகை நட்சத்திரம் - அத்தி மரம்
Published on
Updated on
2 min read

பெரும்பாலான அரசியல்வாதிகளின் பிறந்த நட்சத்திரம் கிருத்திகையாகவே இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 20 வரை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.

இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும். அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது. இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும். கருமேகங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது. கிருத்திகை நட்சத்திரம் ரிஷபம் ராசி - சுக்கிரன் கிரகத்துடன் தொடர்பு உடையது.

கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுகள் மனித உடலில் படும்போது பலவகையான உடல் மாற்றம், மன மாற்றம், நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 30 நிமிடம் கட்டிப் பிடிக்கலாம். அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.

மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் குணம் பெற அத்திப் பழங்கள் சாப்பிடுங்கள் என்று இறைத் தூதர் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

  *  தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

  *  தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

  *  மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

  *  நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

*  போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

*  இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

*  உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

*  மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டுவலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்: அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள். மேலும் இவை கல்லீரல் - மண்ணீரல் அடைப்புகள், வீக்கங்களைப் போக்கப் பயன்படுகிறது.

கண்களின் பார்வையைக் கூட்டும் வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை அத்திப் பழத்தில் பெருமளவில் அடங்கியிருக்கின்றன. மற்ற பழங்ளைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. இரும்புச் சத்து அத்திப் பழத்தில் அதிகமாக இருப்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தச் சோகை நோய் வராது. இரத்த உற்பத்தி அதிகரித்து, நோய் எதிர்ப்பாற்றலும் உடலில் அதிகரிக்கும்.

குறிப்பு:அத்தி நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com